Showing posts with label நல்லாட்சியின் பண்புகள். Show all posts
Showing posts with label நல்லாட்சியின் பண்புகள். Show all posts

Tuesday, May 24, 2011

நல்லாட்சியின் பண்புகள்


ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படையான ஒரு தேவை நல்லாட்சி ஆகும். பொது வளங்களைப் பொறுப்புடனும் செய்ற்திறனுடனும் பயன்படுத்தி, ஊழலைத் தவிர்த்து, மனித உரிமைகளைப் பேணி, சட்ட ஆட்சி செய்து, வாழ்வுத்தரத்தை மேம்படுத்துவது நல்லாட்சியால் முடியும்.
எவ்வளவு வளம் இருந்து நல்லாட்சி இல்லாவிடில் அந்த வளங்கள் வீணடிக்கப்படும், நல்வாழ்வு நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் கிட்டாது.

நல்லாட்சிக்கு 8 பண்புகள் உண்டு என கூறப்படுகிறது. அவையானவை:
  • குடிமக்கள் பங்களிப்பு (பச்சாயர்த்து/ஊர் நிலை, மாவட்டம், மாநிலம், நடுவர் என அனைத்து நிலைகளிலும்)
  • சட்ட ஆட்சி (சட்டம் சார்பற்று ஆக்கப்பட்டு, சமூக அந்தஸ்து பலம் பாக்காமல் சமமாக நிலைநிறுத்தப்படல்)
  • வெளிப்படைத்தன்மை
  • விரைந்த செயற்பாடு (responsiveness)
  • இணக்காப்பாட்டை விரும்பும் தன்மை
  • சமத்துவ, அனைவரையும் உள்வாங்கும் பண்பு
  • தகுதி, செயற்திறன் (effectiveness and efficiency)
  • பொறுப்பாண்மை (accountability)

நல்லாட்சி பற்றி குறள்

·         வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோனோக்கி வாழுங் குடி.(542)

விளக்கம்:

மழையின் செம்மையை எதிர்பார்த்து உலகத்து உயிர்கள் எல்லாம் வாழும். மன்னவனின் செங்கோன்மையை எதிர்பார்த்துக் குடிகள் வாழ்வார்கள்
·         இறைகாக்கும் வையக மெல்லாம் அவனை
முறைகாக்கும் முட்டாச் செயின்.
·         (547)

விளக்கம்:

உலகத்தாரை எல்லாம் மன்னவன் காப்பாற்றி வருவான்; முறை தவறாமல் அவன் செங்கோல் செலுத்தி வந்தால், அது அவனைக் காப்பாற்றி நிற்கும்.
·         எண்பதத்தான் ஓரா ணிறைசெய்யா மன்னவன்
தண்பதத்தான் தானே கெடும்.
·         (548)

விளக்கம்:

முறையிட வருபவரது காட்சிக்கு எளியவனாய் அவர்கள் குறைகளைக் கேட்டு ஆராய்ந்து ணிறை செய்யாத மன்னவன், தாழ்ந்த நிலையிலேயே சென்று தானே கெடுவான்