Showing posts with label புகாரி ஹதீஸ் எண் 7047 தமிழில். Show all posts
Showing posts with label புகாரி ஹதீஸ் எண் 7047 தமிழில். Show all posts

Thursday, June 23, 2011

புகாரி ஹதீஸ் எண் 7047 தமிழில்

www.rahmath.net 

பெருமானாரின் கனவு 
சமுரா பின் ஜுன்தப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெரும்பாலும் தம் தோழர்களிடம் ,,உங்களில் யாரும் (இன்றிரவு) கனவு கண்டீர்களா,, என்று கேட்பது வழக்கம். அப்போதெல்லாம்/ அல்லாஹ் யாரை நாடினானோ அவர் (தாம் கண்ட கனவை) அல்லாஹ்வின் தூதரிடம் எடுத்துரைப்பார். (அதற்கு அல்லாஹ்வின் தூதரும் விளக்கமளிப்பார்கள்.) ஒரு(நாள்) அதிகாலை நேரம் (ஃபஜ்ருத் தொழுகைக்குப் பின்) நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் (பின்வருமாறு) கூறினார்கள்: இன்றிரவு (கனவில்) இரு (வான)வர் என்னிடம் வந்து என்னை எழுப்பி/ ,,நடங்கள்,, என்றனர். நான் அவர்கள் இருவருடன் நடக்கலானேன். நாங்கள் ஒருக்களித்துப் படுத்துக்கொண்டிருந்த ஒரு மனிதரிடம் சென்றோம். அங்கு அவரது தலைமாட்டில் ஒரு பாறாங்கல்லை வைத்துக்கொண்டு மற்றொரு மனிதர் நின்றுகொண்டிருந்தார். அவர் அந்தக் கல்லைப் படுத்திருக்கும் மனிதரின் தலையில் போட/ அது அவரது தலையை நசுக்கிவிடுகிறது. பின்னர் அந்தக் கல் அடித்தவரை நோக்கி உருண்டு வர/ அவர் பின்தொடர்ந்து சென்று கல்லை எடுத்துக் கொள்கிறார். மறுபடியும் அவர் வந்து சேர்வதற்குள் படுத்திருந்தவரின் தலை முன்பிருந்ததைப் போன்றே நல்ல நிலைக்கு மாறிவிடுகிறது. அப்பால் மீண்டும் வந்து முதல் தடவை செய்ததைப் போன்றே அவர் மீண்டும் செய்கிறார். நான் அவர்கள் இருவரிடமும்/ ,,அல்லாஹ் தூயவன்! இவர்கள் இருவரும் யார்,, என்று கேட்டேன். அதற்கு அவ்விருவரும் ,,செல்லுங்கள்/ செல்லுங்கள்,, என்று கூறினர். அப்படியே நாங்கள் சென்று/ மல்லாந்து படுத்திருந்த ஒரு மனிதரை அடைந்தோம். அவரது தலைமாட்டில் இரும்பாலான கொக்கியுடன் ஒருவர் நின்றுகொண்டிருந் தார். அவர் (படுத்திருந்தவருடைய) முகத்தின் ஒரு பக்கமாகச் சென்று கொக்கியால் அவரது முகவாயைப் பிடரி வரை கிழித்தார்< (அவ்வாறே) அவரது மூக்குத் துவாரத்தையும் கண்ணையும் பிடரி வரை கிழித்தார். -அல்லது பிளந்தார்.- பிறகு அவர் (படுத்திருந்தவரின்) மற்றொரு பக்கம் சென்று முதல் பக்கத்தில் செய்ததைப் போன்றே செய்தார். இந்தப் பக்கத்தில் செய்து முடிப்பதற்குள் அந்தப் பக்கம் பழையபடி ஒழுங்காக ஆகிவிடுகிறது. பிறகு அந்தப் பக்கத்திற்குச் செல்கிறார். ஆரம்பத்தில் செய்ததைப் போன்றே (திரும்பத் திரும்பச்) செய்கிறார். நான்/ ,,அல்லாஹ் தூயவன்! இவர்கள் இருவரும் யார்,, என்று கேட்டேன். அவ்விரு(வான)வரும் என்னிடம்/ ,,செல்லுங்கள்/ செல்லுங்கள்,, என்றனர். அப்படியே நாங்கள் நடந்து அடுப்பு போன்று (மேல் பகுதி குறுகலாகவும் கீழ்ப் பகுதி விசாலமாகவும்) இருந்த (பொந்து) ஒன்றின் அருகில் வந்தோம். அதனுள்ளிருந்து (மனிதர்களின்) கூச்சலும் ஆரவாரமும் கேட்டது. உடனே நாங்கள் அதற்குள்ளே எட்டிப் பார்த்தோம். அங்கு ஆண்களும் பெண்களும் நிர்வாணமாக இருந்தார்கள். அங்கு அவர்களுக்குக் கீழேயிருந்து நெருப்பு ஜுவாலை ஒன்று (மேலே) வருகிறது. அந்த ஜுவாலை அவர்களை அடையும்போது அவர்கள் ஓலமிடுகின்றார்கள். நான் (என்னுடன் வந்த) அவ்விரு(வான) வரிடம்/ ,,இவர்கள் யார்,, என்று கேட்டேன். அவர்கள்/ ,,செல்லுங்கள்/ செல்லுங்கள்,, என்று என்னிடம் கூறினர். அப்படியே நாங்கள் நடந்து ஓர் ஆற்றின் அருகே சென்றோம். அது இரத்தத்தைப் போன்று சிவப்பாக இருந்தது. அந்த ஆற்றில் ஒருவன் நீந்திக்கொண்டிருந்தான். ஆற்றின் கரையில் தமக்கருகே நிறைய கற்களைக் குவித்துவைத்தபடி ஒரு மனிதர் இருக்கிறார். அந்த நீச்சல்காரன் நீந்தி நீந்தி/ கற்களைக் குவித்துவைத்துக்கொண்டிருக்கும் மனிதரிடம் (கரைக்குச்) சென்று அவருக்கு முன்னால் தமது வாயைத் திறக்கின்றான். உடனே (கரையில் நிற்பவர்) அவனுடைய வாயில் கற்களைப் போடுகிறார். உடனே அவன் நீந்தியபடி (திரும்பிச்) சென்றுவிட்டு மீண்டும் அவரை நோக்கி வருகின்றான். அவரிடம் அவன் திரும்பி வரும்போதெல்லாம் தனது வாயை அவன் திறந்து காட்ட அவர் அவன் வாயில் கற்களைக் போட்டுக்கொண்டிருக் கிறார். (அவன் திரும்பி பழைய இடத்திற்கே தள்ளப்படுகிறான். இப்படியே தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.) நான் அவ்விரு(வான)வரிடமும்/ ,,இவ்விருவரும் யார்,, என்று கேட்டேன். அவர்கள்/ என்னிடம்/ ,,செல்லுங்கள்/ செல்லுங்கள்,, என்று கூறினார்கள். நாங்கள் அப்படியே நடந்து ஒரு அசிங்கமான தோற்றம் கொண்ட மனிதர் ஒருவரிடம் சென்றோம். அவர் நீ காணுகின்ற மனிதர்களிலேயே மிகவும் அருவருப்பான தோற்றமுடையவர் போன்று காணப்பட்டார். அங்கு அவர் தமக்கு அருகே நெருப்பை மூட்டி அதைச் சுற்றி வந்துகொண்டிருந்தார். நான் அவ்விருவரிடமும்/ ,,இவர் யார்,, என்று கேட்டேன். அவர்கள் என்னிடம்/ ,,செல்லுங்கள்/ செல்லுங்கள்,, என்று கூறினர். அப்படியே நாங்கள் நடந்து அடர்ந்துயர்ந்த பசுமையான ஒரு பூங்காவிற்குச் சென்றோம். அதில் வசந்த காலத்தின் எல்லா வண்ணப் பூக்களும் காணப்பட்டன. அந்தப் பூங்காவிற்கு நடுவில் உயரமான மனிதர் ஒருவர் இருந்தார். வான் நோக்கி உயர்ந்திருந்ததால் அவரது தலையை என்னால் (எளிதில்) பார்க்க முடியவில்லை. அந்த மனிதரைச் சுற்றி நான் ஒருபோதும் கண்டிராத அளவிற்கு ஏராள மான சிறுவர்கள் இருந்தார்கள். நான் அவ்விருவரிடமும்/ ,,இந்த (உயரமான) மனிதர் யார் இந்தச் சிறுவர்கள் யார்,, என்று கேட்டேன். அவர்கள் என்னிடம்/ ,,செல்லுங்கள்/ செல்லுங்கள்,, எனக் கூறிவிடவே நடந்து ஒரு பெரும் பூங்காவுக்கு வந்தோம். அதைவிட பெரிய அழகான பூஙகாவை நான் ஒருபோதும் கண்டதில்லை. (அதில் ஒரு பெரிய மரமும் இருந்தது.) அவ்விருவரும் என்னிடம்/ ,,அதில் ஏறுங்கள்,, என்றனர். அப்படியே அதில் நாஙகள் ஏறி தங்கம் மற்றும் வெள்ளி செஙகற்களால் கட்டப்பட்டிருந்த ஒரு நகரத்திற்கு வந்தோம். அந்த நகரத்தின் தலை வாயிலை அடைந்து (அதைத்) திறக்குமாறு கூறினோம். உடனே எங்களுக்காக அது திறக்கப்பட்டது. நாஙகள் அதில் நுழைந்தோம். அஙகு நீ காணுகின்றவற்றிலேயே மிகவும் அழகான பாதித் தோற்றமும் நீ காணுகின்ற வற்றிலேயே மிகவும் அருவருப்பான (மறு) பாதித் தோற்றமும் கொண்ட சில மனிதர்கள் எங்களை எதிர்கொண்டனர். அவர்களைப் பார்த்து (என்னுடன் வந்த) அவ்விருவரும்/ ,,செல்லுங்கள்< (சென்று) அந்த நதியில் குதியுங்கள்,, என்றனர். அஙகு குறுக்கே ஒரு நதி பாய்ந்துகொண்டிருந்தது. அதன் நீர் தூய வெண்ணிறத்தில் காணப்பட்டது. ஆகவே/ அவர்கள் சென்று அதில் விழுந்து (குளித்து விட்டு) தங்களிடமிருந்து அந்த அசூசை நீங்கிவிட்டிருந்த நிலையில் மிகவும் பொலிவான வடிவத்திற்கு மாறியவர்களாக எங்களிடம் திரும்பிவந்தனர். அவ்விருவரும் என்னிடம்/ ,,இது (-இந்த நகரம்)தான் ,அத்ன், எனும் (நிலையான) சொர்க்கமாகும். இதுவே உங்கள் ஓய்விட மாகும்,, என்றனர். நான் பார்வையை உயர்த்தி மேலே பார்த்தபோது அங்கு வெண் மேகத்தைப் போன்ற மாளிகையொன்றைக் கண்டேன். அவ்விருவரும் என்னிடம்/ ,,இது உங்கள் இருப்பிடம்,, என்றனர். நான் அவர்களிடம்/ ,,உங்கள் இருவருக்கும் அல்லாஹ் சுபிட்சம் வழங்கட்டும்! என்னை விடுங்கள். நான் இதில் நுழைந்துகொள் கிறேன்,, என்றேன். அவ்விருவரும்/ ,,இப்போது முடியாது. நீஙகள் (மறுமையில்) அதில் நுழையத்தான் போகிறீர்கள்,, என்றனர். நான் அவ்விருவரிடமும்/ ,,நேற்றிரவு முதல் நான் பல விந்தைகளைக் கண்டுள்ளேன். நான் கண்ட இவைதாம் என்ன,, என்றேன். அதற்கு அவர்கள் என்னிடம்/ ,,(நீஙகள் கண்ட காட்சிகளின் விவரங்களை) உங்களுக்கு நாங்கள் தெரிவிக்கிறோம்: கல்லால் தலை நசுக்கப்பட்டுக்கொண்டி ருந்த மனிதருக்கு அருகில் முதலில் நீஙகள் சென்றீர்களே! அந்த மனிதன் குர்ஆனை (மனனம்செய்து) எடுத்துக்கொண்டுவிட்டுப் பிறகு அதை (மறந்து)விட்டவன் ஆவான். மேலும்/ அவன் கடமையாக்கப்பட்ட தொழுகைகளை நிறைவேற்றாமல் தூங்கிவிட்டவனும் ஆவான். (அடுத்து) தனது முகவாய்/ மூக்குத் துவாரம்/ கண் ஆகியவற்றை பிடரிவரை கிழிக்கப் பட்டுக்கொண்டிருந்த மனிதனுக்கு அருகில் நீங்கள் சென்றீர்களே! அந்த மனிதன் அதிகாலையில் தமது வீட்டிலிருந்து புறப்பட்டு ஒரு பொய்யைச் சொல்ல அது (பல்வேறு வழிகளில்) உலகம் முழுவதும் போய்ச் சேரும். அடுப்பு போன்ற கட்டடம் ஒன்றில் நிர்வாணமாகக் கிடந்த ஆண்களும் பெண்களும் விபசாரம் புரிந்த ஆண்களும் விபசாரம் புரிந்த பெண்களுமாவர். ஆற்றில் நீந்திக்கொண்டும் (கரையை நெருங்கும்போது வாயில்) கல் போடப்பட்டுக்கொண்டும் இருந்த ஒரு மனிதனுக்கு அருகே நீஙகள் சென்றீர்களே! அவன் வட்டி வாங்கித் தின்றவன் ஆவான். நெருப்பை மூட்டி அதைச் சுற்றிவந்துகொண்டிருந்த அருவருப்பான தோற்றத்திலிருந்த அந்த மனிதர் நரகத்தின் காவலரான மாலிக் ஆவார். அந்தப் பூங்காவிலிருந்த உயரமான மனிதர் (இறைத்தூதர்) இப்ராஹீம் (அலை) அவர்களாவார். அவர்களைச் சுற்றியிருந்த சிறுவர்கள் இயற்கை மரபில் (இஸ்லாத்தில்) இறந்துவிட்ட சிறுவர்கள் ஆவர். இதை நபி (ஸல்) அவர்கள் கூறியபோது/ முஸ்லிம்களில் சிலர்/ ,,அல்லாஹ்வின் தூதரே! இணைவைப்பாளர்களின் குழந்தைகளும் (அந்தப் பூங்காவில் இருந்த குழந்தைகளில் அடங்குவார்களா),, என்று கேட்டனர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்/ ,,(ஆம்) இணைவைப்பாளர்களுடைய குழந்தைகளும் தாம்,, என்று பதிலளித்தார்கள்.-(66) (தொடர்ந்து என்னுடன் வந்த அவ்விரு வரும் கூறுகையில்/) ஒரு பாதி அழகாகவும் மறுபாதி அசிங்கமாகவும் காட்சியளித்த மக்கள்/ நல்லறங்களுடன் தீமைகளையும் கலந்துவிட்டவர்களாவர்< (பின்னர்) அவர் களை அல்லாஹ் மன்னித்துவிட்டான் (என்று கூறினர்).