Thursday, January 27, 2011

தமிழ்நாட்டில் 2010-ல் சாலை விபத்து


தமிழ்நாட்டில் 2010-ல் சாலை விபத்து:
14
ஆயிரம் பேர் பலி-இருசக்கர வாகன விபத்துக்கள் அதிகரிப்பு
சென்னை, டிச. 30-
போலீசாரின் குற்றப்பதிவேட்டு விவரங்களின் படி தமிழ்நாட்டில் ஆண்டு தோறும் சாலை விபத்துக்களில் பலியாவோர் எண் ணிக்கை அதிகரித்து வருகிறது.
கடந்த 2009-ம் ஆண்டில் மொத்தம் 60,794 விபத்துகள் ஏற்பட்டன. இதில் 12,727 பேர் பலியானார்கள். ஆனால் இதுவரை இல்லாத அளவாக இந்த ஆண்டில் சாலை விபத்துகளில் அதிக அளவு உயிரிழப்பு ஏற்பட்டு உள்ளது. அக்டோபர் மாதம் வரை மட்டுமே 54,870 விபத்துகள் நடந்துள்ளன. இது கடந்த ஆண்டு டிசம்பர் வரை நடந்த விபத்துக்களை விட குறைவாகும். ஆனால் இதில் உயிரிழந்தோர் 13,085 பேர். காயம் அடைந்தவர்கள் 5,719 பேர். டிசம்பர் மாத புள்ளி விவரங்களை ஒப்பிடுகையில் சாலை விபத்துக்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆயிரத்தை தாண்டக் கூடும் என்று தெரிய வந்துள்ளது.
சென்னை நகரில் மட்டும் கடந்த ஆண்டு வாகன விபத்துக்களில் 582 பேர் பலி யானார்கள். இந்த அண்டில் இது மேலும் அதிகரித்து உள்ளது.பெரும்பாலான விபத்துக்கள் டிரைவர்களின் கவனக் குறைவு காரணமாகவே நடக்கின்றன என ஆய்வில் தெரிய வந்துள்ளது. கடந்த 10 மாதங்களில் டிரைவர்களின் கவனக்குறைவால் 10,990 விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன. இதில் 11,920 பேர் உயிரிழந்துள்ளனர். தனியார் வாகனங்களை விட அரசு வாகனங்களால் விபத்துகள் அதிகரித்து உள்ளன. அரசு போக்குவரத்து கழக பஸ்கள், லாரிகள் உள்ளிட்ட வாகனங்களால் ஏற்பட்ட 1,187 விபத்துகளில் 1,299 பேர் பலியாகி உள்ளனர்.
ஆம்னி பஸ்கள், லாரிகள் உள்ளிட்ட தனியார் வாகனங்களில் சிக்கி 845 பேர் பலியாகி உள்ளனர். இரு சக்கர வாகன விபத்தில் சிக்கி 400-க்கும் மேற் பட்டவர்கள் உயிரிழந்துள் ளனர். இது கடந்த ஆண்டை விட அதிகம் ஆகும்.
பராமரிக்கப்படாத குண்டும் குழியுமாக உள்ள சாலைகள், மரணப் படுகுழிகள், பாலம் கட்டும் பணிகள் நடைபெறும் இடங்களில் அதிக விபத்துகள் ஏற்படு கின்றன. இதில் 150 பேர் இறந்துள்ளனர். இது தவிர மோசமான கால நிலையாலும், இரவு நேரத்திலும், சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களில் மோதியும் விபத்துக்கள் ஏற்பட்டு அதிக அளவில் பலியாகிறார்கள். தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் ஏற்படும் விபத்துகளில் உயிரிழந் தோர் எண்ணிக்கை 9,670 ஆக அதிகரித்துள்ளது. இதே போல் மாவட்ட, கிராம புற சாலைகளில் நடக்கும் விபத்துகளில் 3,400 பேர் பலியாகி உள்ளனர். தமிழ்நாட்டில் இப்போது இயக்கத்தில் உள்ள மோட்டார் வாகனங்களின் எண்ணிக்கை 1.30 கோடியாக அதிகரித்து உள்ளது.
சென்னை உள்ளிட்ட நகரங்களில் இரு சக்கர வாகனங்கள், கார்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இரு சக்கர வாகனங்களில் செல்வோர் ஹெல்மட் அணிவதை கட்டாயமாக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டாலும் அரசு இதுகுறித்து தீவிர நடவடிக்கை எடுக்க வில்லை. ஹெல்மட் அணியாமல் செல்லும்போது 90 சதவீதம் பேர் விபத்தில் சிக்குகிறார்கள். சாலை விதிகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் மக் களிடையே இன்னமும் போதிய அளவில் சென்று சேரவில்லை. இதனால் உயிரிழப்புகள் ஆண்டு தோறும் அதிகரிக்கிறது.

No comments:

Post a Comment