Wednesday, April 27, 2011

சாயிபாபா காற்றில் தங்கச்சங்கிலி, வாயில் தங்கலிங்கம்.


  • ஏழை பாழை, மிடில் கிளாஸ்களுக்கு - விபூதி மேஜிக்
  • அரசியல்வாதி, அப்பர் கிளாஸ்களுக்கு - செயின் மேஜிக்
  • MASS ATTRACTION-க்கு - லிங்க வாந்தி மேஜிக்
விபூதி மேஜிக்: விபூதி மஜிக்கில், அதை கையிலிருந்து கொட்டுவதற்கு முதல், பாபாவின் வலக்கை, கடிதங்கள் வைத்திருக்கும் மற்ற கையை துழாவுவதையும் (மற்றக்கையில் திண்மமாக்கப்பட்ட விபூதி வில்லைகளை வைத்திருப்பார்) அக்கையிலிருந்து விபூதி வில்லையொன்றை எடுத்த பின்னர் வலக்கையை காற்றில் அசைத்து (அசைக்கும்போது வில்லைகளை உதிர்த்தி விடுவார்) விபூதியை கொட்டுகின்றார்.

தங்க ஆபரண மேஜிக்: இதற்கு பலவித டெக்னிக்குகள் பாவிக்கப்படுகின்றன. சிலைகளில் பின்னால் ஒளித்து வைத்து தெரியாமல் எடுத்து காற்றிலே கையசைத்து எடுப்பது போல் பாவனை செய்வது, இன்னொருவர் இரகசியமாக பாபாவின் கைகளிலே போட்டுவிட்டு போவது, பாபா தன்னுடைய இருக்கையின் மெத்தையின் கீழிருந்து எடுப்பது எப்பவை அவற்றில் ஒருசில.

லிங்க மேஜிக்: இதற்கும் பலவித டெக்னிக்குகளை பாவிக்கின்றார். ஆரம்பகாலங்களில் லிங்கம் எடுப்பதற்கு கொஞ்சநேரம் முதல் லிங்கத்தை வயிற்றினுள் விழுங்கிவிடுவார், பின்பு வாந்தியெடுத்து அதை தன் வாயிலிருந்து எடுப்பது போல பாவனை செய்வார்.
ஆனால் இப்போது பாபா வயதாகி தளர்ந்து போய்விட்டதால், இப்போதெல்லம் விழுக்குவதில்லை, மாறாக
1.
மேசைமீதிருக்கும் கைக்குட்டைகளில் ஒன்றுள் லிங்கத்தை மறைத்து வைத்து, கைக்குட்டையால் வாயை துடைப்பது போல பாவனை செய்து, கைக்குட்டையை வாய்க்கு கிட்ட கொண்டுசென்று பின்பு கைக்குட்டைக்குள் இருந்து லிங்கத்தை எடுத்துகாட்டுவார் (மக்கள் நினைப்பார்கள், பாபா வாய்க்குள் இருந்து கைக்குட்டைக்குள் துப்பியுள்ளார் என்று)
2.
மேலே கூறியமாதிரி, மேசையில் ஒரு கைக்குட்டைக்குள் லிங்கத்தை வைத்திருப்பார், பின்பு கைக்குட்டைகளால் வாயை துடைப்பது மாதிரி பாவனை செய்து, சிவலிங்கம் உள்ள கைக்குட்டையை வாய்க்கு கிட்ட கொண்டுசென்று, மறைவாக லிங்கத்தை வாய்க்குள் எடுத்துக்கொள்வார், பின்பு கைக்குட்டையை எடுத்துவிட்டு, வாயிலிருந்து மேசைமீது லிங்கத்தை துப்புவார்.

நீங்கள் யாராவது இம்மூன்று மேஜிக்குகளையில் இலாவகமாக செய்யக்கூடியவராக இருந்தால் நீங்களும் பாபாவாகலாம் :)

காற்றில் தங்கசங்கிலி, வாயில் தங்கலிங்கம் சாய்பாபா வரவழைத்தால் இந்தியாவில் ஏன் இன்னும் ஏழைகள் இருக்கிறார்கள?

No comments:

Post a Comment