Wednesday, May 18, 2011

நவீன உலகை கட்டமைத்த சிற்பிகள் முஸ்லிம்களின் முன்னோர்களே!.

அ. அப்துல் அஜீஸ் பாகவி
சிந்னைச் சரம்

நவீ உலகை கட்டமைத்த சிற்பிகள் முஸ்லிம்களின் முன்னோர்களே!. அவர்களின் அறிவுக் கொடைகளின் விளைவாகவே உலகம் வெளிச்சம் பெற்றது. அன்றை விஞ்ஞானத்தின் அத்துனை துறைகளிலும் அவர்களே உலகின் ஞான ஆசியரிர்களாக திகழ்ந்தார்கள்.

இன்றைய இளைய சமுதாயம் முஸ்லிம் முன்னோடிகளின் அரிய சாதனைகளை கேள்விப்படுகிற போது அது அவர்களுக்கு கற்பனையோ என்று தோன்றலாம். ஆனால் அவை கலப்படமற்ற சத்தியங்கள்.

சிறந்த கல்வியை தேடுவோர் இன்று வேண்டுமானால் ஆஸ்திரேலியாவுக்கும் அமெரிக்காவிற்கும் படைஎடுக்கலாம். ஒரு காலம் இருந்தது. சிறந்த கல்வி வேண்டும் என்போர் முஸ்லிம்களின் பக்தாதுக்கும் கார்டோவாவுக்கும் தான் பயணம் சென்றார்கள். அங்கு தான் அவர்கள் நிபுணர்களாக முடியும் என்ற நிலமை இருந்தது.

இன்று ஐரோப்பாவும் அங்குள்ள கிருத்துவர்களும் மருத்துவத்துறையில் கொடிகட்டிப்பறக்கிறார்கள். ஒரு காலம் இருந்தது. அப்பொது ஐரோப்பிய கிருத்துவர்கள் மருத்துவம் படிப்பபதையும் மருத்தவம் பார்ப்பதையும் கடவுளோடு போட்டியிடும் செயலாக கருதி அதை வெறுத்தார்கள். anatomy உடலியல் ஆய்வு இழிவானதாக கருதப்பட்டது. அப்போது பெரும்பாலும் யூதர்களே ஐரோப்பாவின் மருத்துவர்களாக இருந்தார்கள். அவர்களில் அதிகமானோர் முஸ்லிம்களின் மருத்துவ்கல்லூரிகளில் கல்வி பயின்றவர்களே!

இங்கிலாந்து மன்னர் முதலாம் ஹென்றின் தனி மருத்துவராக இருந்த புட்ரஸ் அல் போன்ஸி ஸ்பொயின் முஸ்லிம்களிடம் மருத்துவம் பயின்றவராவார். அவிசென்னா என்று மருவிப்போன அலி பின் சீனா தான் மருத்துவ உலகின் பிதாமகராக ருதப்படுகிறார். ஆவர் எழுதிய அல் கானூன் பித் திப்பு என்று நூல் 15 ம் நூற்றாண்டிலேடீய 16 பதிப்புகள் வெளியிடப்பட்டடிருக்கிறது.

வைசூரி மற்றும் தட்டம்மை நோய் பற்றி ஆராய்ந்து முதலில் நூல் எழுதியவர் அர் ராஜி ஆவர். அவர் எழுதிய அல் ஜுத்ரி வர் ஹஸ்பா என்ற அரபு நூல்தான் இந்நோய் பற்றி எழுதப்பட்ட முதல் ஆய்வு நூல் என்று வரலாற்று ஆய்வாளர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.1565 ஆண்டு இந்நூல் வெனிஸ் நகரில் லத்தீன மொழியில் மொழிபெயர்க்கப்ட்ட பிறகு இந்நூல் ஐரோப்பா மழுவதும் பரவியுள்ளது. இந்நூலை படித்த பிறகுதான் எட்வெர்ட் ஜென்னர் அம்மைக் கான தடுப்பூசியை அம்மை குத்துததலை பற்றி ஆய்வு செய்தார் என வரலாறு சொல்கிறது. இந்நோய்களை கடவுளின் சாபம் என்று ஐரோப்பா கருதிய காலகட்டத்தில் எந்த ஒரு நோயுக்கும் மருந்துண்டு; என்ற பெருமானார்(ஸல்) அவர்களின் பொன் மொழி (முஸ்லிம் 4084) இமாம் ராஜியை இது பற்றி ஆராயத்தூண்டியது.

சிறந்த மருத்துவம் வேண்டும் என்போர் நாடிச் செல்லும் நகராக அன்றைய பக்தாத் திகழ்ந்தது. பீமாரிஸ்தான் என்ற பெயரில் நூற்றுக்கணக்காகன படுக்கை வசிதி கொண்ட மருத்துவமனைகள் 10 ம்நூற்றாண்டில் பக்தாதில் அமைந்திருந்திருந்தன. அப்பாஸிய கலீபா அல் முக்ததரிர் மருத்தர்களுக்கு சான்றளிக்கும் நடைமுறையை துவங்கினார். அரசாங்கம் வழங்கும் தரச்சான்றிதழ் பெற்ற மருத்துவர்கள் மட்டுடே மருத்துவம் பார்க்க அனுமதிக்பபடுவர் என்று அவர் உத்தரவிட்டார். அந்த உத்தரவின் விளைவாக 860 மருத்துவர்களுக்கு மட்டுமே மருத்துவம் பார்க்க அனுமதிக்கப்பட்டது. இதனால் உலகில் போலி மருத்துவர்கள் இல்லாத முதல் நகரமாக பக்தாது நகரம் விளங்கியது என்று வரலாற்று போற்றுகிறது. இன்றைய கால கட்டத்தில் மருத்துவர்கள் அரசிதழ் பதிவு பெற்றவர் அதிகாரியாக (கெஸட்ட் ஆபீஸர்) கருதப்படுகிறார். இந்த நடைமுறையை உலகிற்கு அறிமகப்படுத்தியவர் முஸ்லிம் மன்னர் கலீபா அல்முகததரி;தான் எனபதை வரலாறு தனது ஞாபகத்தில் பதித்து வைத்திருக்கிறது.

Experimental method   எனப்படும் ஆய்வு நடைமுறையை ஐரொப்பாவில் அறிமுகப்படுத்தியவர் ரோஜர் பேகன் (Roger bacon). இவர் முஸ்லிம்களின் ஸ்பெயினில் கல்வி கற்றுவிட்டு வந்தவராவார்.

12 ம் நூற்றாண்டிலேயே உலக வரை படத்தை (வோர்ல்டு மேப்) தயாரித்துக் கொடுத்தார் அல் இத்ரீஸ் என்ற முஸ்லிம் ஆய்வாளர்.

கெமிஸ்ட்ரீ (வேதியில்) துறையின் தந்தையாக ஜாபிர் பின் ஹய்யான் போற்றப்படுக்pறார்.15 நூற்றாண்டு வரை அவருடைய நூற்கள் தான் ஐரோப்பாவில் வேதியில் துறையின் இறுதிச்சான்றுகளாக கருதப்பட்டன.

உலகம் முழவதிலும் எண்கள் (நம்பர்களை) எழுதுகிற போது 123 என்று எழுதும் வழக்கம் தான் வழக்கத்தில் இருக்கிறது. மற்ற நடைமுறைகள் அனைத்து சற்றேறரக்குறைய ஒழிந்து விட்டன அல்லது அழிந்து விட்டன என்று சொல்லலாம். காரணம் மற்றவை அனைத்தும் சிரமமானதாக இருந்தன. ஐரோப்பிய சமுதயம் ரோம எண்களை பயன்படுத்தி வந்தது. அதை புனிதமானது என்று கூட கருதினார்கள். அனால் அதில் பெரிய எண்களை எழுதவது சிரமமானது. எண்பத்தி எட்டு என்று ழுதுவதவதற்கு LXXX VII என்று ஏழு எழுத்துக்களை எழுத வேண்டும். 123 என்ற எண்கள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு உலககம் நிம்மதிப் பெருகூச்சு விட்டது. இன்று நாம் பயன்படுத்துகிற 123 என்ற எண்களுக்கு முழுவடிவம் கொடுத்தவர்கள் முஸ்லிம்கள் தான் என்று நம்பிள்ளைகளுக்கு நாம் சொன்னால் அவர்கள் ஆச்சரியத்தில் வாயை பிளப்பார்கள். தமிழ் நாட்டில் விற்பனையாகிற ஒரு அரிச்சுவடிப் புத்தகத்தை வாங்கி எண்கள் என்ற பாடத்தை எடுத்து 123 என்ற எண் வடிவங்களுக்கு மேலே பார்த்தீர்கள் என்றால் அவை அரபி என்ககள் என்று அடையாளம் இடப்பட்டிருப்பதை காணலாம். ஐரோப்பியர்களும் இந்த எண்களை அரபி என்கள் என்றே குறிப்பிட்டார்கள்.ஆனால் புழைய இஸ்லாமிய அரபி நூல்களில் இந்த எண்களை இந்திய எண்கள் என்று குறிப்பிட்டிருப்பார்கள். உண்மையில் இந்த எண்களில் 1 முதல் 9 முடிய உள்ள எணகள் இந்திய எண்களே! இந்தியர்களிடம் 9 வரை தான் நம்பர் இருந்தது. அதனால் அது முழமை பெறாமல் இருந்தது. இரு நூறு என்று சொல்வதற்கு 2 நூறு என்று தான எழுத வேண்டியிருந்தது. இந்த நம்பர்களை ஆங்வு செய்த அபு மூஸா அல்குவாரிஜ்மி (780 - 850)என்ற முஸ்லிம் கணிதவியலாளர்தர்ன் இனறைய வழக்த்திலள்ள சைபர் நடைமுறையை பயன்படுத்தி எண்களை இலகுவாக கையாள முடியும் என்று உணர்த்தினார்.

இது போல இன்னும் ஏராளமான தகவல்கள் முஸ்லிம்கள் அறிவுலகத்தின் அரசர்களாக வாழ்ந்த வரலாற்றை சொல்லிக் கொண்டிருக்கின்றன. முஸ்லிம்கள் அறிவியல் துறைகளில் மிகப்பெரும் சாதனைகளை நிகழ்த்திக் கொண்டிருந்த இந்தக் கால கட்டத்தில் ஐரோப்பா அறிவியல் ஒளியற்ற இரண்ட கண்டமாக இருந்தது என பிரிட்டானிய கலைக்களஞ்சியம் ஒப்புதல் வாக்குமூலம் தருகிறது. ஐரோப்பிய வரலாற்றில் கி.பி 6 ம் நூற்றாண்டுக்கும் 10 ம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலம் இருண்ட காலம் என்றழைக்கப்படுகறிது. ஐரொப்பாவில் வன்முறை நிறைந்து அறிவொளி இருண்டுகிடந்த காலம் அது. (; பிரிட்டன் என்ஸைக்ளோபீடியா1984)இருண்டு கிடந்த ஐரோப்பாவிற்கு மட்டுமுல்ல அன்றை முழு உலகிற்கும் முஸ்லிம்களே விஞ்ஞானத்தினுடையவும் நாகரீகத்தினுஐடயவுமான கொடைகளை வாரிவழங்கிக் கொண்டிருந்தார்கள்.

காலச் சுழற்சியின்; எந்தக் கொடும்; புயலில் அந்த பழம் பெருமை சரிந்தததோ தெரியாது. முஸ்லிம் சமுதாயம் அறிவீனத்தின் பள்ளத்தில் விழுந்து இழிவுச் கதியை சாந்து பூசிக் கொண்டு விட்டது. இதற்கு கீழ் இன்னுமு; விழுவதற்கு பள்ளமில்லை எனும் அளவு வீழ்ந்து பட்ட பிறகு எழுந்தாக வேண்டிய நிர்பந்தத்திற்கு முஸ்லிம் சமுதாயம் ஆளிகியிருக்கிறது. எந்த ஊண்று கோல்களின் துணையுமில்லாமல் தட்டுமடுமாறு அது எழ முயற்சி செய்யும் போது முன்னோர்கள் வாழ்ந்த பொற்காலத்தை பற்றிய கனவு, எம் தந்தையைர்..அவர்கள் என்ற உணர்வு அதன் மூச்சுக்காற்றில் சக்தியை ஏற்றட்டும்.

முன்னோர்களின் சிறப்பான வாழ்வு முறைகளை ப்பற்றி கேள்விப்படும் போது அந்தப் பெருமையில் கரைந்து போய் விடாமல் அதிலிருந்து ஊக்கமும் உற்சாகமும் பெற்று உயிர்தெழ வேண்டிய கடமை முஸ்லிம் சமூகத்தினுடையது. ஏழ்மை என்பது பரிதாபத்திற்குரியதல்ல . ஒரு பணக்கார வம்சத்தின் வாரிசு ஏழையாக வாழ நேரிட்டால் அது பரிதாபத்திற்குரியது. ஓரு விவசாயக் கூலித் தொழிலாளியின் மகன் கல்வியறிவற்றவராக இருப்பது சகித்துக் கொள்ளத்தக்கது தான் . ஆறிவாளிகளின் குடும்பத்தில் ஒருவர் அல்லது வாத்தியார் வீட்டுப் பிள்ளை படிப்பறிவற்றவராக இருப்பது அதிகம் கேலிக்குரியது.

ஏதேனும் ஒரு துறையில் ஒரு முஸ்லிம் நிபணரவாவது இன்றைய சூழ்நிலையில் அவரக்கு மட்டுமே பெருமை சேர்ப்பதாக இல்லாமல் சமுதயத்திற்கும் மரியதை பெற்றுதருவதாகவும் அமையும்.

நூறு பணக்காரர்களை விட நூறு செல்வாக்கு பெற்ற தலைவர்களைவிட ஒரு சிந்தனையாளர் ஒரு விஞ்ஞானி சமுதாயத்திற்கு அதிகம் முக்கியமானவராவார். கிரேக்க நாடு எத்தனையோ அரசர்களை பார்த்திருக்கலாம். எத்தனையோ செல்வந்தர்களைப் பார்த்திருக்கலாம். ஒரு சாக்ரடீஸ் தான் வரலாற்றில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பது கவனித்தில் கொள்ளத்தக்க செய்தியாகும்.

No comments:

Post a Comment