சஹர் கடைசி நேரம் :
சஹர் கடைசி நேரம் விசயfத்தில் அலட்சியம் கூடாது. அது பேணுதலுக்கு சொல்லப் பட்டிருந்தாலும் கவனிக்க வேண்டிய ஒன்றாகும். அந்த நேரத்தில் எழுந்தால் சீக்கிரமாக் சாப்பிட்டு முடித்து விட வேண்டும்.
பஜ்ர் நேரம் உறுதியாக தெரியாத காலத்தில் தான் பாங்கு சொல்லும் வரை சாப்பிட அனுமதிக்கப் பட்ட்து.
இப்போது நேரம் உறுதியாக அறிந்து கொள்ள முடிகிற காரணத்தால் பாங்கு வரை சாப்பிட்டால் நோன்பு கிடைக்காது. நோன்பை கழா செய்ய வேண்டியதாகிவிடும்
பஜ்ர் நேரம் வந்து 4 நிமிடம் கழிந்த பிறகே பாங்கு சொல்லப் படுகிறது. சில சந்தர்பங்களில் முஅத்தின் பாங்கு சொல்ல தாமதிக்கலாம்.
· நோயுக்காக ஊசி போட்டால் நோன்பு முறியாது.
· உணவாக ஏதேனும் ஊசி வழியாக செலுத்தப் பட்டால் நோன்பு முறிந்து விடும்
· மாத்திரை சாப்பிட்டால நோன்பு முறிந்து விடும்
· இரத்தப் பரிசோதனையினால் நோன்பு முறியாது.
· தானாக வாந்தி வந்தால் நோன்பு முறியாது.
· பல்லிடுக்கில் இரத்தம் கசிந்தால் நோன்பு முறியாது
· கண்ணுக்கு மருந்து ஊற்றினால் நோன்பு முறியாது
· குளிப்பு கடமையாக இருந்தால் சஹர் செய்த பிறகு குளித்துக் கொள்ளலாம். சாப்பிடுவதற்கு முன் ஒளு செய்து கொள்ள வேண்டும்.
· தூக்கத்தில் இந்திரியம் வெளிப்பட்டால் நோன்பு முறியாது
No comments:
Post a Comment