தமிழக உள்ளாட்சித் தேர்தலில் 4.5 லட்சம் பேர் போட்டி
திருச்சி நீங்கலாக, 9 மாநகராட்சிகளில் மேயர் பதவிக்கு மட்டும் மொத்தம் 193 பேர் போட்டியிடுகின்றனர். அதிக அளவாக சென்னை மேயர் பதவிக்கு 32 பேர் களம் கண்டுள்ளனர்.
தமிழகத்தில் உள்ள 1,32,467 உள்ளாட்சிப் பதவியிடங்களுக்கு அக்டோ பர் 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் இரு கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் 10 மாநகராட்சிகளும் அடங்கும். முதலில் ஒத்திவைக்கப்பட்ட திருச்சி மாநகராட்சித் தேர்தல் தற்போது அக்டோ பர் 17ம் தேதியே நடைபெறவுள்ளது. இதற்கு மட்டும் தாமதமாக வேட்பு மனு தாக்கல் தொடங்கியது.
உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட 5,27,014 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். இதைப் பரிசீலிக்கும் பணி நடந்தது. அதிக அளவிலான வேட்பு மனுக்கள் குவிந்திருந்ததால் பரிசீலனைப் பணி தாமதமாக நடந்தது. நேற்று மாலை 3 மணியுடன் வேட்பாளர்கள் மனுக்களை திரும்பப் பெற அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர் இறுதிப் பட்டியல் வெளியானது.
அதன்படி கிட்டத்தட்ட 4.5 லட்சம் பேர் இறுதி வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர். திருச்சி மாநகராட்சியின் இறுதி வேட்பாளர் பட்டியல் அக்டோ பர் 9ம் தேதி வெளியாகும்.
மேயர் பதவியைப் பொறுத்தவரை சென்னையில் அதிக அளவாக 32 பேர் போட்டியிடுகின்றனர். மதுரையில் 28, திருப்பூரில் 28, கோவையில் 27, சேலத்தில் 24, ஈரோட்டில் 18, நெல்லையில் 14, தூத்துக்குடியில் 12, வேலூரில் 10 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.
உள்ளாட்சித் தேர்தலில் திமுக, அதிமுக, தேமுதிக, விடுதலைச் சிறுத்தைகள், காங்கிரஸ், பாமக, விடுதலைச் சிறுத்தைகள், பாஜக என அத்தனை கட்சிகளுமே தனித் தனியாக போட்டியிடுவதால் பல முனைப் போட்டியை தமிழகம் சந்தித்துள்ளது. இப்படி இத்தனைக் கட்சிகள் தனித் தனியாக போட்டியிடுவது என்பது வரலாறு காணாத ஒன்றாகும். இதனால் தேர்தல் முடிவுகளை மக்கள் அதிகம் எதிர்பார்த்துள்ளனர்.
இருமுனை, மும்முனை அல்ல... பல்முனைப் போட்டியைக் கொண்டிருக்கிறது, எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தல்.
கூட்டணி கட்சிகளை கண்டுகொள்ளாமல் ஒன்று, இரண்டு, மூன்று என வேட்பாளர் பட்டியலை அடுக்கிக் கொண்டிருந்தார், அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா.
பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் வைத்த கூட்டணி இப்போது அறிவிப்பு ஏதுமின்றி உள்ளாட்சியில் காணாமல் போன நிலையில், 9 மாநகராட்சிகளுக்கும் மேயர் வேட்பாளர்களை வெளியிட்டிருக்கிறார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.
"இரண்டு பக்கமும் மகிழ்ச்சி" என்ற உணர்வோடு, திமுகவும் காங்கிரஸும் தனித்து களம் காண்கின்றன.
"இரண்டு பக்கமும் மகிழ்ச்சி" என்ற உணர்வோடு, திமுகவும் காங்கிரஸும் தனித்து களம் காண்கின்றன.
தேர்தல் அறிவிப்புக்கு பின்பும் குறைகூறிக்கொண்டே அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்த கம்யூனிஸ்ட் கட்சிகளும் இப்போது தனித்து போட்டியிடுவது என முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
பாமகவும் தன் பலத்தை நிரூபிக்கவுள்ளது. பேரவைத் தேர்தலைப் போலவே இப்போதும் தனித்து இறங்குகிறது பிஜேபி.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலைப் புறக்கணித்த மதிமுகவும் உள்ளாட்சியில் தனியாக வலம் வருகிறது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலைப் புறக்கணித்த மதிமுகவும் உள்ளாட்சியில் தனியாக வலம் வருகிறது.
No comments:
Post a Comment