Thursday, December 15, 2011

உமர் (ரலி) இறுதி நாட்கள்


அந்த இறுதி நாட்கள்.

உமர் (ரலி) அவ்அர்களின் இறுதி நிமிடங்களில் அவருடன் இருந்த இராக்கியரான அம்ர் பின் மைமூன் கூறுகிறார்; :

உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் கொலை செய்யப்படுவதற்குச் சில நாட்களுக்கு முன் மதீனாவில் அவரை நான் பார்த்தேன். அவர், இராகின் வரிவிதிப்பாளர்களாக நியமிக்கப் பட்ட  ஹுதைஃபா பின் யமான் (ரலி) ,உஸ்மான் பின் ஹுனைஃப் (ரலி) ஆகியோருக்கு அருகில் நின்று கொண்டு அவர்களை நோக்கி , இராக்கின் கிராமப்புரங்களில் நீஙகள் எப்படிச் செயல்பட்டீர்கள். ங்கு மக்களால் சுமக்க முடியாத  வரிச்சுமையை சுமத்தி விட்டதாக அஞ்சுகிறீர்களா? என்று கேட்டார். அதற்கு வ்விருவரும், உரிமை யாளர்களின் சக்திக்கேற்பவே வரிவிதித் தோம். அதில் மிக  அதிகமாக  ஒன்றுமில்லை என்றனர். உமர் (ரலி)  அவர்கள் மீண்டும் அவ்விருவரை நோக்கிஅந்த நிலத்திற்கு அதிகப்படியான ரியை சுமத்தி விட்டீர்களாஎன்று நன்கு யோசித்துப் பாருஙகள்என்றார். இருவரும்இல்லைஎன்று பதிலளித்தனர். அப்போது உமர் (ரலி) அவர்கள்அல்லாஹ் என்னை உயிரோடு வைத்திருந்தால் இராக் நகரின்  விதவைப் பெண்களை எனக்குப் பிறகு வேறெவரிடமும் கையேந்தத் தேவை யில்லாத நிலையில் தான் விட்டுச் செல்வேன்என்று கூறினார். இப்படி அவர்கள் சொல்லி நான்கு நாட்கள் கூட சென் றிருக்காது. அதற்குள் பிச்சுவாக் கத்தியால்  உமர் (ரலி)அவர்கள் குத்தப்பட்டார்.

உமர் (ரலி) அவர்கள் குத்தப்பட்ட நாளன்று அதிகாலைத் தொழுகைக்காக நான் நின்று கொண் டிருக்கிறேன். எனக்கும் உமர் (ரலி) அவர் களுக்கும் இடையில் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்களைத் தவிர வேறு எவரும் இருக்கவில்லை.
அன்று அப்போது தான் தக்பீர் கூறியிருப்பார்கள். என்னை நாய் கொன்று விட்டது என்று கூறினார்கள்.  அபூ லுஃலுஆ ஃபைரோஸ், என்பவன் பிச்சுவாக் கத்தியால் அவர்களைக் குத்தி விட்டிருந்தான்

அந்த  அந்நிய மொழி பேசும் இறைமறுப்பாளன் தனது பிச்சுவாக் கத்தியை எடுத்துக் கொண்டு தனது வலப்பக்கம்,  இடப்பக்கம் நிற்கும் எவரையும் விடாமல் குத்திக் கொண்டே விரைந் தோடலானான். முடிவாக பதின்மூன்று ஆண்களை அவன் குத்தி விட்டிருந்தான். அதில் ஏழுபேர் இறந்து விட்டனர். இதைக் கண்ட முஸ்லிம்களில் ஒருவர் தமது நீண்ட தொப்பியை அவன் மீது வீசி எறிந்தார். அவன் பிடிபட்டு விடுவோம் என்று பயந்து தன்னத் தானே அறுத்துக் தற்கொலை செய்துகொண்டான்.

உமர் (ரலி) அவர்கள் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களின் கரத்தைப் பிடித்து மக்களுக்குத் தொழுவிப் பதற்காகத் தம்மிடத்தில் முன்னிறுத்தி னார்கள்.  இந்தச் சம்பவத்தை உமர் (ரலி) அவர்களுக்கருகே இருந்த மற்றவர்களும் பார்த்தனர். ஆனால் பள்ளி வாசலின் மூலைகளில்  இருந்த வர்களுக்கு இது தெரியவில்லை.

மக்கள் தொழுது முடித்து  திரும்பிய போது உமர் (ரலி) அவர்கள்இப்னு அப்பாஸ் அவர் களே! என்னைக் கொன்றவன் யார் என்று பாருஙகள்என்று கூறினார்கள். அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) சிறிது நேரம் சுற்றிப் பார்த்து விட்டு வந்துமுகீராவின் அடிமை தான் உஙகளைக் குத்தியது என்று கூறினார்கள். உமர் (ரலி) அவர்கள்அந்தத் திறமையான தொழிற் கலைஞனா என்று கேட்டார்கள். ஆம்என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள். அல்லாஹ் அவனைக் கொல்லட்டும்! அவன் விஷயத்தில் நல்லதைத் தானே நான் உத்தரவிட்டேன்! ஆனால் என்னையே அவன் கொன்று விட்டானே! தன்னை முஸ்லிம் என்று சொல்லிக் கொள்ளும் ஒருவரது கரத்தால் எனக்கு மரணம் நேரும்படிச் செய்துவிடாத அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். மதீனா நகரத்தின் சில பணிகளுக்கு அரபுகள் அல்லாத அந்நியர்கள் அவசியம் எனக் கூறி அந்நியத் தொழிற் கலைஞர்கள் மதீனாவில் அதிகம் இருக்க வேண்டுமென (இப்னு அப்பாஸ் அவர்களே!  நீஙகளும் உஙகள் தந்தையார் அப்பாஸ் அவர்களுமே அதிகம் விரும்பினீர்கள்என்று உமர் (ரலி) அவர்கூறினார்.

அப்பாஸ் (ரலி) அவர்களே நிறைய அடிமைகள் உடையவராக இருந்தார்கள். அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் உமர் (ரலி)  அவர்களை நோக்கி நீஙகள் விரும்பினால் மதீனாவிலுள்ள அரபுகளல்லாத தொழிற் கலைஞர்கள் அனைவரையும் கொன்று விடுகிறோம்என்று கூறினார்.

அதற்கு உமர் (ரலி) அவர்கள்  நீஙகள் பேசுவது தவறு! ங்களது மொழி யில் அவர்கள் பேசிய பின்பும், உஙகளைப் போல அவர்கள் தொழுத பின்பும், உஙகளைப் போன்றே ,ஹஜ்ஜு, செய்த பின்புமா அவர்களைக் கொலை செய்யப்போகிறீர்கள்)என்று கேட்டார்கள்.

குற்றுயிராயிருந்த உமர் (ரலி) அவர்களை அவர்களது வீட்டுக்கு சுமந்து செல்லப்பட்டது. உடன் நாஙகளும் சென்றோம். இத்ற்கு முன்னாள் இப்படி ஒரு துயறை சந்தித்திராதவர்கள் போல மக்கள் துயருற்றிருந்தனர். ஒருவர் அவருக்கு ஒன்றும் ஆகி விடாதுஎன்கிறார். மற்றொருவர்/ அவருக்கு மரணம் சம்பவித்து விடும் என்றுநான் அஞ்சுகிறேன், என்று கூறுகிறார்.

அப்போது காயத்தின் ஆழத்தைக் கண்டறிவதற்காக பேரீச்சம் பழச்சாறு கொண்டு வரப்பட்டது. அதை உமர் (ரலி) அருந்தினார். அது அவரது  வயிற்றின் காயத்தின் வழியாக வெளியேறியது. வெளியில் வந்தது பேரீச்சம் பழச் சாறா அல்லது உமரின் இரத்தமா என்று பாகு படுத்த முடியாத விதத்தில் இரண்டும் ஒரே நிறத்தில் இருந்ததால் பிறகு பால் கொண்டு வரப்பட்டது. அதை அவர்கள் அருந்தி னார். அதுவும் காயத்தின் வழியாக வெள்ளை நிறத்தில்வெளியேறியது. அப்போது அவர் இறக்கும் லையை அடைந்து விட்டார் என்று மக்கள் அறிந்து கொண்டனர். அவரின் அருகே நாஙகள் சென்றோம். மக்கள் வந்து உமர் (ரலி) அவர்களைப் புகழ்ந்து பேசத் தொடஙகி னார்கள். ஓர்  இளைஞர்நம்பிக்கையாளர்களின் தலைவரே! அல்லாஹ்வின் தூதருடனான உஙகளுடைய தோழமை இஸ்லாத்தில் உஙகளுக்கிருக்கும்  சிறப்பு, பிறகு நீஙகள் ஆட்சித் தலைவராகப் பதவியேற்று  நீதியாக நடந்து கொண்டது, இப்போது உயிர்த் தியாகம் செய்ய விருப்பது  ஆகியவற்றின் மூலம் அல்லாஹ் உஙகளுக்கு வழஙகியுள்ள நற்பாக்கியங்களைக் செய்தி கொண்டு மகிழ்ச்சி அடையுஙகள்என்று கூறினார்.

(இதைக் கேட்ட) உமர் (ரலி) அவர்கள் இவை யெல்லாம் எனக்கு சாதகமாக இல்லா விட்டாலும் பாதகமாக இல்லாமலிருந்தாலே போதும். எனவே இவை எனக்கு சாதகமாக வும் வேண்டாம் பாதகமாகவும் வேண்டாம். சரிக்குச் சமமாக இருப்பதையே விரும்பு கிறேன்என்று கூறினார்கள். அந்த இளைஞர் திரும்பிச் சென்ற போது அவரது வேட்டி பூமியொல் உரசிக்  கொண்டிருந்தது. உமர் (ரலி) அவர்கள், அந்த இளைஞரை கூப்பிடுங்கள் என்று கூறினார். அவர் திரும்பி வந்த போது எனது சகோதரரின் மகனே! உனது ஆடையை பூமியில் படாமல் உயர்த்திக் கட்டு! உன் ஆடை நீண்ட நாள் உழைக்கும். இது  உனது இறைவனுக்கு  அஞ்சி நடப்பதுமாகும்என்று கூறினார்.

பிறகு தம் மகனை நோக்கி உமரின் மகன் அப்துல்லாஹ்வே! என் மீது எவ்வளவு கடன் பாக்கி உள்ளது என்று பார்என்று கூறினார். அவர் கணக் கிட்டுப் பார்த்தர். எண்பத்தாறாயிரம் திர்ஹம் கடன்  இருந்த்து. உமர் (ரலி) அவர்கள்/ இந்தக் கடன்களை அடைப்பதற்கு உமரின் செல்வம் போதுமென்றால் அதிலிருந்து கொடுத்து விடு. அவ்வாறு போது மானதாக இல்லாவிட்டால் நமது குடும்பமான அதீ பின் கஅப் மக்களிடம் கேட்டு வாஙகிக்கொள். அவர்களிடம்  போதுமான பணம் இல்லாவிட்டால்,  நமது குலமான குறைஷிக்  குலத்தாரிடம் கேட்டு வாஙகிக்கொள். இவர்களையும் தாண்டி வேறு யாரிடமும் செல்லாதே. பின் என் சார்பாக  இந்தக் கடன்களை நீயே அடைத்து விடு!. பிறகு இறை நம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா அவர்களிடம் நீ சென்றுஉமர் உஙகளுக்கு சலாம் கூறுகிறார், என்று கூறு!. மன்னர் என்ற கருத்துடையவிசுவாசிகளின் தலைவர் என்று என்னை அடைமொழியிட்டு கூறாதே. ஏனெனில் நான் இன்று முதல் விசுவாசிகளுக்கு ஆட்சித் தலைவ னல்லன். அன்னை  ஆயிஷா -ரலி- அவர்களிடம்உமர் தம்முடைய இரு தோழர்களான் நபி (ஸல்)  மற்றும் அபூபக்ர் (ரலி) ஆகியோர்  அடக்கம் செய்யப்பட்டுள்ள உஙகளது அறையில் அவர்களுடன் தம்மையும் அடக்கம் செய்வதற்கு உஙகளிடத்தில்அனுமதி கோருகிறார், என்று சொல், எனக் கூறியனுப்பினார்.

 ஆயிஷா (ரலி) அவர்களிடத்தில்  உமர் (ரலி) அவர்களின் புதல்வர் சென்று சலாம் கூறி வீட்டுக்குள் நுழைய அனுமதி கேட்ட பிறகு வீட்டுக்குள் நுழைந்தார். அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள் உமர்(ரலி) அவர்கள் குத்தப்பட்ட செய்தியறிந்து  அழுது கொண்டு அமர்ந்திருப்பதைக் கண்டார். அவரிடம் உமரின் மகனார்  “(என் தந்தை) உமர் பின் கத்தாப் தஙகளுக்கு சலாம் கூறுகிறார். தம்முடைய இரு தோழர்களுடன் தம்மையும் அடக்கம் செய்வதற்குத் தஙகளிடம் அனுமதி கேட்கிறார்என்று கூறினார். அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள் எனக்காக அந்த இடத்தை ஒதுக்கிக் கொள்ள நான் நினைத்திருந்தேன். இப்போது அஙகு அடக்கம் செய்யப்படுவதற்கு என்னை விட அவருக்கே  முதலிடம் கொடுத்து விட்டேன். அவரையே அந்த இடத்தில் அடக்கிக் கொள்ளுஙகள்என்று கூறினார்.

அவர் உமர் (ரலி) அவர்களிடம் திரும்பி வந்த போது இதோ/ உமர் அவர்களின் மகன்அப்துல்லாஹ் வந்து விட்டார்என்று கூறப்பட்டது. ஒருக்களித்துப் படுத்திருந்தஉமர் (ரலி) அவர்கள் என்னைத் தூக்கி உட்கார வையுஙகள்என்று கூறினார். அஙகிருந்த ஒருவர் தன்னோடு அவரை அணைத்துக் கொண்டு சாய்த்து அமர்த்தினார்.

உமர் (ரலி) தம் மகனை நோக்கி என்ன பதில் கிடைத்த்து?என்று கேட்டார். நீஙகள் விரும்பியது தான். இறைநம்பிக்கை யாளர்களின் தலைவரே! ஆயிஷா-ரலி அனுமதித்துவிட்டார்என்று அப்துல்லாஹ் கூறினார்.
அப்போது எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! இது தான் எனக்கு கவலை யளித்துக் கொண்டிருந்தது. இப்போது என் ஆசை நிறைவேறிவிட்டது. நான் இறந்து விட்டால் என்னைச் சுமந்து என்னை அடக்கம் செய்யும் அந்த அறைக்குக் கொண்டு செல்லுஙகள். பிறகு மீண்டுமொருமுறை ஆயிஷா அவர்களுக்கு நீ சலாம் சொல்லி அவரிடம் உமர் பின் கத்தாப் தம்முடைய இரு தோழர்களுக்கு அருகில் தம்மை அடக்கம் செய்வதற்குத் தஙகளிடத்தில்அனுமதி கேட்கிறார், என்று சொல். அவர்கள் அனுமதித்தால் என்னை அந்த அறைக்குஉள்ளே கொண்டு செல்லுஙகள். அவர்கள் அனுமதி தரமறுத்தால் என்னை பொது அடக்கத்தலத்திற்குத் திருப்பிக் கொண்டு சென்று விடுஙகள்என்று கூறினார்.

அஙகிருந்த ஆண்கள் உமர் (ரலி)  அவர்களிடம், இறை நம்பிக்கையாளர்களின் தலைவரே! தஙகளுக்கு அடுத்த ஆட்சிக்கு வரவேண்டிய பிரதிநிதியை  அறிவித்து  இறுதி உபதேசம் செய்யுஙகள்என்று கூறினார்கள். அதற்கு அவர் அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் எவரைக் குறித்து திருப்தியடைந்த நிலையில் இறந்தார்களோ அந்தக் குழுவினர் தாம்  இந்த ஆட்சித் தலைமை விஷயத்தில் முடிவு செய்ய வேறெவரை விடவும் மிகத் தகுதி படைத்தவர்களாக எனக்குத் தெரிகிறார்கள்.என்று கூறி விட்டு,  அலீ (ரலி), உஸ்மான் (ரலி), ஸுபைர் பின் அவ்வாம்  ரலி),  தல்ஹா (ரலி),  சஅத் பின் அபீவக்காஸ் ரலி), அப்துர் ரஹ்மான்  பின் அவ்ஃப்-ரலி, ஆகியோரின் பெயர்களை குறிப்பிட்டார்கள். மேலும்உமரின் மகன்  அப்துல்லாஹ் வும் உஙகளுடன் இருப்பார். ஆனால், ஆட்சி அதிகாரத்தில் அவருக்கு எந்தப் பஙகுமில்லை என்று மகன் அப்துல்லாஹ்வுக்கு ஆறுதல் போலக் கூறினார்கள்.

இஸ்லாத்தில்  முன்னவர்களான முஹாஜிர்களின் உரிமை களை அறிந்து, அவர்களின் கண்ணியத்தைக் காக்க வேண்டும் என்று எனக்குப் பின்னர் வரவிருக்கும் ஆட்சித் தலைவருக்கு  நான் இறுதி உபதேசம் செய்கிறேன். மேலும்,  இறை நம் பிக்கையை உறுதியாகப் பற்றிக் கொண்ட மதீனா நகரின் அன்சாரிகளுக்கு நன்மையை புரியும்படியும் நான் அவருக்கு உபதேசம் செய்கிறேன். அவர்களில் நன்மை புரிபவரிடமிருந்து அவரது நன்மை ஏற்கப்பட்டு, அவர்களில் தவறிழைப்பவர் மன்னிக்கப்படவேண்டும்.

இதே போல  நகர்ப்புற மக்களுக்கும் நன்மையைச் செய்யும்படியும் அவருக்கு நான் உபதேசம் செய்கிறேன். ஏனெனில் அவர்கள் இஸ்லாத்திற்கு உறுதுணையாக நின்றவர் ஆவர். நிதி திரட்டித் தருபவர்களாகவும், எதிரிகளை தஙகளது வீரத்தாலும் பெரும் எண்ணிக்கை யாலும் கலக்கமடையச்  செய்பவர்களாகவும் உள்ளனர். அவர்களிடமிருந்து அவர்களின் தேவைகளுக்குப் போக எஞ்சியதை மட்டுமே எடுத்துக் கொள்ளலாம். அதையும் அவர்களின் சம்மதத்துடன் தான் எடுக்க வேண்டும்.

கிராமப்புற அரபுகளுக்கும் நன்மையே புரியும்படியும் அவருக்கு நான் உபதேசம் செய்கிறேன். ஏனெனில், அவர்களே பூர்வீக அரபிகளும் இஸ்லாத்தின் அடிப்படை யும் ஆவார்கள்.   அவர்களுடைய செல்வத்தில் மலிவானவை மட்டுமே எடுக்கப்பட்டு அவர் களிடையேயுள்ள ஏழைகளுக்கு வழஙகப்பட வேண்டும். மேலும், அல்லாஹ்வுடைய பொறுப்பிலும் அவனுடைய தூதரின் பொறுப்பிலும்  இருப்பவர்களான முஸ்லிமல்லாதவர்களுக்கு அளிக்கப்பட்ட உறுதிமொழிகள் நிறை வேற்றப்பட வேண்டுமெனவும், எதிரிகள் அவர்களைத் தாக்க வரும் போது அவர்களுக்குப் பின்னாலிருந்து  அவர்களுக்காகப் போர் புரிய வேண்டு மெனவும், காப்பு வரி விதிக்கும் போது அவர்களது சக்திக்கேற்பவே தவிர அவர்கள் சிரமத்திற்குள்ளாக்கப்படக் கூடாது எனவும் நான் அவருக்கு உபதேசம் செய்கிறேன்என்று உமர் (ரலி) அவர்கள் கூறினார்.

கத்திக்குத்துக்கு உள்ளாகி மூன்று நாள்களுக்குப் பிறகு உமர் (ரலி) அவர்கள் இறந்தார்.  அவரது உடலை  எடுத்துக் கொண்டு ஆயிஷா (ரலி) அவர்களின் அறைக்கு வந்து சேர்ந்தோம். அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)   அவர்கள் ஆயிஷா (ரலி)  அவர்களுக்கு  சலாம் சொன்னார். பிறகுஉஙகளுக்குரிய அறையில் தம் இரு தோழர்களுக்கு அருகில் தம்மை அடக்கம் செய்ய என் தந்தை உமர் பின் கத்தாப் அவர்கள் உஙகளிடம் அனுமதி கோருகிறார்கள்என்று கூறினார்கள். அதற்கு அவர், அவரை உள்ளே கொண்டு வாருஙகள்என்று கூறினார். உமர் அவர்களின் உடல் உள்ளே கொண்டு செல்லப்பட்டு அவருடைய இரு தோழர்களுக்கு அருகில் நல்லடக்கம் செய்யப் பட்ட்து.  

(ஸஹீஹுல் புகாரி 3700)

No comments:

Post a Comment