Thursday, November 29, 2012

காவிரி பேச்சுவார்த்தை தோல்வி


பெங்களூரு: காவிரி யில் தண்ணீர் திறப்பது தொடர்பாக, உச்சநீதிமன்ற அறிவுரைப்படி, நேற்று தமிழக, கர்நாடகா முதல்வர்கள், பெங்களூரில் நடத்திய பேச்சு, தோல்வியில் முடிந்தது

தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

தமிழகத்தில், 15 லட்சம் ஏக்கர் விவசாய நிலத்தில், குறுவை சம்பா பயிரிடப்பட்டுள்ளது. தற்போது, மேட்டூரில் அணையில், 15 டி.எம்.சி., தண்ணீர் உள்ளது. இதில், 5 டி.எம்.சி., தண்ணீர், குடிநீருக்கு தேவைப்படுகிறது. சகதி நீர் போக, மீதி, 6.32 டி.எம்.சி., தண்ணீர் மட்டுமே உள்ளது. இது, ஆறு நாள் விவசாய பாசனத்துக்கு மட்டுமே உதவும். இன்னும் குறுவை சம்பாவுக்கு, 65 நாள் தண்ணீர் தேவைப்படுகிறது. கர்நாடகா, தண்ணீர் திறந்து விடவில்லை என்றால், சம்பா பயிர் கருகி விடும்.
ஒப்பந்தப்படி, 2013, பிப்ரவரி வரை, கர்நாடகா, 52.8 டி.எம்.சி., தண்ணீரை விட வேண்டும். ஆனால், தற்போது, கிருஷ்ண ராஜ சாகர் - கே.ஆர்.எஸ்., கபினியில் தண்ணீர் குறைவாக உள்ளது என, கர்நாடகா கூறுகிறது.தமிழகத்தின் தேவைக்காக, 32 டி.எம்.சி., தண்ணீர் மட்டுமாவது விட வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். ஆனால், கர்நாடகா, ஒரு சொட்டு தண்ணீர் கூட விட முடியாது என, திட்டவட்டமாக கூறி விட்டது.

No comments:

Post a Comment