புஹாரி ரஹ்மத் தமிழாக்கம்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நான் (இறையில்லம் கஅபா அருகில்) ஹத்தீமில் .....அல்லது ஹிஜ்ரில்..... படுத்துக் கொண்டிருந்தேன். அப்போது என்னிடம் ஒருவர் (வானவர் ஜிப்ரீல்) வந்து (என் நெஞ்சைப்) பிளந்தார். .... அறிவிப்பாளர்களில் ஒருவரான அனஸ் (ரலி) அவர்கள்/ இங்கிருந்து இதுவரையில் அவர் பிளந்தார் என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதாகக் கூறினார்கள். அறிவிப்பாளர் கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். நான் என்னருகிலிருந்த (அனஸ் (ரலி) அவர்களின் நண்பர்) ஜாரூத் (ரஹ்) அவர்களிடம்/ அனஸ் (ரலி) அவர்கள்/ இங்கிருந்து இது வரையில்.... என்று எதைக் கருத்தில் கொண்டு கூறினார்கள் என்று கேட்டேன். அதற்கு ஜாரூத் (ரஹ்) அவர்கள்/ நபி (ஸல்) அவர்களின் நெஞ்சின் காறையெலும்பிலிருந்து அடிவயிறு வரை ...அல்லது நெஞ்சின் ஆரம்பத்திலிருந்து அடிவயிறு வரை... என்ற கருத்தில் அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள் என்று பதிலளித்தார்கள. பிறகு அ(ந்த வான)வர் (ஜிப்ரீல்) எனது இதயத்தை வெளியிலெடுத்தார். பிறகு/ இறை நம்பிக்கையால் நிரப்பப்பட்ட தங்கத் தட்டு ஒன்று என்னிடம் கொண்டு வரப்பட்டு/ எனது இதயம் கழுவப்பட்டு/ (அதில்) அந்த இறை நம்பிக்கை நிரப்பப்பட்டது. பிறகு பழையபடி மீண்டும் (எனது இதயம்/ மூடி) வைக்கப்பட்டது. பிறகு கோவேறு கழுதையை விடச் சிறியதும் கழுதையை விடப் பெரியதுமான வெள்ளை நிறத்திலமைந்த (மின்னல் வேக) வாகனம் ஒன்றும் என்னிடம் கொண்டு வரப்பட்டது. -(இந்த ஹதீஸில் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அனஸ் (ரலி) அவர்களிடம் ஜாரூத் (ரஹ்) அவர்கள்/ அது புராக் எனும் வாகனம் தானே அபூஹம்ஸா அவர்களே! என்று கேட்டார்கள். அதற்கு அனஸ் (ரலி) அவர்கள்/ ஆம்/ (அது புராக் தான்) அந்த வாகனம் பார்வை எட்டுகிற தூரத்திற்கு ஓர் எட்டு வைக்கும் என்று கூறினார்கள். பிறகு நான் அந்த வாகனத்தில் ஏற்றப்பட்டேன். என்னை ஜிப்ரீல் முதல் வாகனத்திற்கு அழைத்துச் சென்று அதன் கதவை திறக்கும்படி கூறினார். அப்போது/ யார் அது என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்/ ஜிப்ரீல் என்று பதிலளித்தார். உங்களுடன் (வந்திருப்பவர்) யார் என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்/ முஹம்மது என்று பதிலளித்தார். (அவரை அழைத்து வரச் சொல்லி) அவரிடம் ஆள் அனுப்பப்பட்டிருந்ததா என்று கேட்கப்பட்டது. அவர்/ ஆம் என்றார். அவரது வரவு நல்ல வரகாட்டும். அவரது வருகை மிக நல்ல வருகை என்று (வாழ்த்துச்) சொல்லப்பட்டது. அப்போது (அந்த வாகனத்தின் காவலர்) காவைத் திறந்தார். நான் அங்கு சென்றடைந்தபோது அங்கு ஆதம் (அலை) அவர்கள் இருந்தார்கள். (என்னிடம் ஜிப்ரீல்) இவர்கள் உங்கள் தந்தை ஆதம். இவர்களுக்கு சலாம் சொல்லுங்கள் என்று கூறினார். அவர்களுக்கு நான் சலாம் சொன்னேன். அவர்கள் (எனக்கு) பதில் சலாம் சொன்னார்கள். பிறகு/ ஆதம் (அலை) அவர்கள்/ (என்) நல்ல மகனும்/ நல்ல இறைத்தூதருமான உங்கள் வரவு நல்வரவாகுக! என்று சொன்னார்கள். பிறகு (என்னை அழைத்துக் கொண்டு ஜிப்ரீல்) இரண்டாம் வானத்திற்கு உயர்ந்து அதைத் திறக்கும்படி சொன்னார். யார் அது என்று கேட்கப்பட்டது. அவர்/ ஜிப்ரீல் என்று பதிலளிக்க/ உங்களுடன் இருப்பவர் யார் என்று வினவப்பட்டது. (அதற்கு) அவர்/ முஹம்மது என்று பதிலளித்தார்/ (அவரை அழைத்து வரும்படி) அவரிடம் ஆளனுப்பப்பட்டிருந்ததா என்று கேட்கப்பட்டது. அவர்/ ஆம் என்று பதிலளித்தார். அவரது வரவு நல்வரவாகட்டும். அவரது வருகை மிக நல்ல வருகை என்று (வாழ்த்துச்) சொல்லப்பட்டது. பிறகு (அந்த வானத்தின் காவலர் கதவைத்) திறந்தார். நான் அங்கு சென்றடைந்த போது/ அங்கு யஹ்யா (அலை) அவர்களும்/ ஈசா (அலை) அவர்களும் இருந்தனர். - அவ்விருவரும் சிற்றன்னையின் மக்களாவர்-(134). இது யஹ்யா அவர்களும்/ ஈசா அவர்களும் ஆவர். இவர்களுக்கும் சலாம் சொல்லுங்கள் என்று ஜிப்ரீல் கூறினார். நான் (அவர்கள் இருவருக்கும்) சலாம் சொன்ன போது அவர்கள் சலாமிற்கு பதில் கூறினார்கள். பிறகு அவர்கள் இருவரும்/ நல்ல சகோதரரும்/ நல்ல இறைத்தூதருமான உங்கள் வரவு நல்வரவாகட்டும் என்று (வாழ்த்து) கூறினர். பிறகு ஜிப்ரீல் என்னை அழைத்துக் கொண்டு மூன்றாம் வானத்திற்கு உயர்ந்தார். (அந்த வானத்தின் கதவை) திறக்கும்படி கூறினார். யாரது என்று கேட்கப்பட்டது. அவர்/ ஜிப்ரீல் என்றும் பதிலளித்தார். உங்களுடன் (இருப்பவர்) யார் என்று கேட்கப்பட்டது. அவர்/ முஹம்மது என்று பதிலளித்தார். (அவரை அழைத்து வரும்படி) அவரிடம் ஆளனுப்பப்பட்டிருந்ததா என்று கேட்கப்ட்டது. அவர்/ ஆம் என்று பதிலளித்தார். அவர் வரவு நல்வரவாகட்டும். அவரது வருகை நல்ல வருகை என்று (வாழ்த்துத்) சொல்லப்பட்டது. பிறகு (அந்த வானத்தின் கதவு) திறக்கப்பட்டது. அஙகு நான் சென்றடைந்த போது அஙகு யூசுஃப் (அலை) அவர்கள் இருந்தார்கள். இவர்கள் தாம் (இறைத்தூதர்) யூசுஃப். இவர்களுக்கு சலாம் சொல்லுஙகள் என்று ஜிப்ரீல் கூறினார். நான் அவர்களுக்கு சலாம் உரைத்தேன். அவர்களும் (எனக்கு) பதில் சலாம் சொன்னார்கள். பிறகு/ நல்ல சகோதரரும் நல்ல இறைத்தூதருமான உஙகள் வரவு நல்வரவாகட்டும் என்று (வாழ்த்துச்) சொன்னார்கள். பிறகு என்னை அழைத்துக் கொண்டு ஜிப்ரீல் நான்காம் வானத்திற்கு உயர்ந்தார். (அந்த வானத்தின் கதவைத்) திறக்குமாறு சொன்னார். யாரது என்று கேட்கப்பட்டது. அவர்/ ஜிப்ரீல் என்று பதிலளித்தார். உங்களுடன் இருப்பவர் யார் என்று கேட்கப்பட்டது. அவர்/ முஹம்மத் என்று பதிலளித்தார். (அவரை அழைத்து வரும்படி) அவரிடம் ஆளனுப்பப்பட்டிருந்ததா என்று வினவப்பட்டபோது/ ஆம் என்று அவர் பதிலுரைத்தார். அவர் வரவு நல்வரவாகட்டும். அவரது வருகை மிக நல்ல வருகை என்று (எனக்கு வாழ்த்துச்) சொல்லப்பட்டு(க் கதவும்) திறக்கப்பட்டது. அங்கு நான் சென்றடைந்த போது அங்கு இத்ரீஸ் (அலை) அவர்கள் இறந்தார்கள். இவர்கள் தாம் இத்ரீஸ் (அலை) அவர்கள். இவர்களுக்கு சலாம் கூறுங்கள் என்று ஜிப்ரீல் கூறினார். நான் அவர்களுக்கு சலாம் சொன்னேன். அவர்களும் எனக்கு பதில் சலாம் கூறினார்கள். பிறகு/ நல்ல சகோதரரும் நல்ல இறைத்தூதருமான உங்கள் வரவு நல்வரவாகட்டும் என்று (வாழ்த்தும்) சொன்னார்கள். பிறகு என்னை அழைத்துக் கொண்டு ஜிப்ரீல் ஐந்தாம் வானத்திற்கு வந்து சேர்ந்து அதைத் திறக்கும்படி சொன்னார். யாரது என்று கேட்கப்பட்டது. அவர்/ ஜிப்ரீல் என்று பதிலளித்தார். உங்களுடன் (இருப்பவர்) யார் என்று வினவப்பட்டது. அவர் முஹம்மத் என்று பதிலளித்தார். (அவரை அழைத்து வருமாறு) அவரிடம் ஆளனுப்பப்பட்டிருந்ததா என்று கேட்கப்பட்டது. அவர்/ ஆம் என்றார். அவர் வரவு நல்வரவாகட்டும். அவர் வருகை மிக நல்ல வருகை என்று (வாழ்த்துச்) சொல்லப்பட்டது. நான் அங்கு சென்றடைந்த போது ஹாரூன் (அலை) அவர்கள் அங்கிருந்தார்கள். இவர்கள் தான் ஹாரூன். இவர்களுக்கும் சலாம் சொல்லுங்கள் என்று ஜிப்ரீல் சொன்னார். நான் அவர்களுக்கு சலாம் சொன்னேன். அவர்கள் (எனக்கு) பதில் சலாம் சொன்னார்கள். பிறகு அவர்கள்/ நல்ல சகோதரரும் நல்ல இறைத்தூதருமான உங்கள் வரவு நல்வரவாகட்டும் என்று (வாழ்த்துச்) சொன்னார்கள். பிறகு என்னுடன் அவர் ஆறாம் வானத்திற்கு உயர்ந்தார். (அதன் கதவை) திறக்கும்படி கூறினார். யாரது என்று கேட்கப்பட்டது. அவர்/ ஜிப்ரீல் என்று பதிலளித்தார். உங்களுடன் யார் என்று கேட்கப்பட்டது. அவர்/ முஹம்மத் என்றார். (அவரை அழைத்து வரும்படி) அவரிடம் ஆளனுப்பப்பட்டிருந்ததா என்று கேட்கப்பட்டது. அவர்/ ஆம் என்றார். (அந்த வானத்தின் காவலர்) அவர் வரவு நல்வரவாகட்டும் அவரது வருகை மிக நல்ல வருகை என்று (வாழ்த்துச்) சொன்னார். அங்கு நான் சென்றடைந்த போது மூசா (அலை) அவர்கள் அங்கிருந்தார்கள். இவர்கள் தாம் மூசா. இவர்களுக்கு சலாம் சொல்லுங்கள் என்று ஜிப்ரீல் கூறினார். நான் அவர்களுக்கு சலாம் சொன்னேன். அவர்கள் (எனக்கு) பதில் சலாம் சொன்னார்கள். பிறகு/ நல்ல சகோதரரும் நல்ல இறைத் தூதருமான உங்கள் வரவு நல்வரவு ஆகட்டும் என்று (வாழ்த்துச்) சொன்னார்கள். நான் (மூசா -அலை- அவர்களைக்) கடந்து சென்ற போது அவர்கள் அழுதார்கள். தங்கள் அழுகைக்கு என்ன காரணம் என்று அவர்களை நோக்கிக் கேட்கப்பட்டது. அவர்கள்/ என் சமுதாயத்தினரில் சொர்க்கம் புகுபவரைவிட அதிகமானவர்கள்/ எனக்குப் பிறகு அனுப்பப்பட்ட இந்த இளுஞரின் சமுதாயத்திலிருந்து சொர்க்கம் புகுவார்கள் என்பதால் தான் அழுகிறேன் என்று பதிலளித்தார்கள். பிறகு என்னை அழைத்துக் கொண்டு ஜிப்ரீல் ஏழவாது வானத்திற்கு உயர்ந்தார். (அதன் கதவைத்) திறக்கும்படி ஜிப்ரீல் கூறினார். யாரது என்று கேட்கப்பட்டது. அவர்/ ஜிப்ரீல் என்று பதிலளித்தார். உங்களுடன் யார் என்று கேட்கப்பட்டது. அவர்/ முஹம்மத் என்றார். (அவரை அழைத்து வரும்படி) அவரிடம் ஆளனுப்பப்பட்டிருந்ததா என்று கேட்கப்பட்டது. அவர்/ ஆம் என்றார். (அந்த வானத்தின் காவலர்) அவர் வரவு நல்வரவாகட்டும் அவரது வருகை மிக நல்ல வருகை என்று (வாழ்த்துச்) சொன்னார். அங்கு நான் சென்றடைந்த போது இப்ராஹிம் (அலை) அவர்கள் அஙகிருந்தார்கள். இவர்கள் தாம் உஙகள் தந்தை. இவர்களுக்கு சலாம் சொல்லுஙகள் என்று ஜிப்ரீல் கூறினார். நான் அவர்களுக்கு சலாம் சொன்னேன். அவர்கள் (எனக்கு) பதில் சலாம் சொன்னார்கள். அவர்கள்/ நல்ல மகனும்/ நல்ல இறைத் தூதருமான உங்கள் வரவு நல்வரவு ஆகட்டும் என்று வாழ்த்துச் சொன்னார்கள். பிறகு/ (வான எல்லையில் அமைந்துள்ள இலந்தை மரமான) சித்ரத்துல் முன்தஹா என்னும் இடத்திற்கு நான் கொண்டு செல்லப்பட்டேன். அதன் (இலந்தை) பழங்கள் (யமனிலுள்ள) ஹஜர் எனுமிடத்தில் (உற்பத்திப் பொருளான மண்) கூஜாக்கள் போல் இரந்தன. அதன் இலைகள் யானைகளின் காதுகள் போரிருந்தன். இது தான் சித்ரத்துல் முன்தஹா என்று ஜிப்ரீல் (அறிமுகப்படுத்திக்) கூறினார். அங்கு (அந்த மரத்தின் வேர்ப்பகுதியில் இருந்து ஓடி வருகின்ற) நான்கு ஆறுகள் இரந்தன். இரண்டு ஆறுகள் உள்ளே இருந்தன். மற்றும் இரண்டு ஆறுகள் வெளியே இருந்தன. ஜிப்ரீலே! இவ்விரண்டு ஆறுகள் எவை என்று நான் கேட்டேன். அவர்/ உள்ளே இருப்பவை இரண்டும் சொக்கத்தில் உள்ள (ஸல்ஸபீல்/ கவ்ஸர் ஆகியவை)வையாகும். வெளியே இருப்பவை இரண்டும் நைல் நதியும் யூப்ரடீஸ் நதியும் ஆகும் என்று பதிலளித்தார்கள். பிறகு/ அல் பைத்துல் மஃமூர் (எனும் வானவர்கள் அதிகம் சஞ்சரிக்கும் இறையில்லம்) எனக்கு (அருகே கொண்டு வந்து) காட்டப்பட்டது. பிறகு என்னிடம் ஒரு பாத்திரத்தில் மதுவும்/ ஒரு பாத்திரத்தில் பாலும் இன்னொரு பாத்திரத்தில் தேனும் கொண்டு வரப்பட்டது. நான் பாலை (தேர்ந்து) எடுத்தேன். (பிறகு அதைக் குடித்தேன்) அப்போது ஜிப்ரீல்/ இதுதான் நீங்களும் நீங்கள் உங்கள் சமுதாயத்தாரும் இருக்கும் (இஸ்லாம் எனும்) இயற்கை நெறியாகும் என்று கூறினார்கள். பிறகு என் மீது ஒவ்வெரு தினத்திற்கும் ஐம்பது (வேளைத்) தொழுகைகள் கடமையாக்கப்பட்டன. நான் திரும்பி வந்த போது மூசா (அலை) அவர்களை கடந்து சென்றேன். அப்போது அவர்கள்/ உங்களுக்கு என்ன உத்தரவிடப்பட்டது என்று கேட்டார்கள். ஒவ்வெரு நாளும் ஐம்பது (வேளைத்) தொழுகை (கட்டாயக் கடமையாக நிறைவேற்றும்படி) எனக்கு உத்திரவிடப்பட்டது என்று நான் பதிலளித்தேன். உங்கள் சமுதாயத்தார் ஒரு தினத்திற்கு ஐம்பது வேளைத் தொழுகையைத் தாங்க மாட்டார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் உங்களுக்கு முன் மக்களிடம் அனுபவப்பட்டுள்ளேன்/ பனூ இஸ்ராயீல்களுடன் பழகி நன்கு பக்குவப்பட்டுள்ளேன். ஆகவே/ உங்கள் இறைவனிடம் திரும்பிச் சென்று அவனிடம் உஙகள் சமுதாயத்தினருக்காக (தொழுகையின் எண்ணிக்கையைக்) குறைத்துத் தரும்படி கேளுங்கள் என்று சொன்னார்கள். நான் திரும்பிச் சென்றேன். (இறைவனிடம் குறைத்துத் தரும்படி கேட்டேன்) இறைவன் (ஐம்பதிலிருந்து) பத்தை எனக்குக் குறைத்தான். நான் மூசா (அலை) அவர்களிடம் திரும்பி வந்தேன். முன்போலவே (இன்னும் குறைத்துக் கேட்கும்படி) சொன்னார்கள். நான் திரும்பிச் சென்றேன். அப்போது (நாற்பதிலிருந்து) பத்தைக் குறைத்தான். நான் மூசா (அலை) அவர்களிடம் திரும்பி வந்தேன். அப்போதும் முன்போலவே (இன்னும் குறைத்துக் காட்டும்படி கூறினார்கள். நான் (இறைவனிடம்) திரும்பிச் சென்றேன். எனக்கு (முப்பதிலிருந்து) பததைக் குறைத்தான். நான் மூசா (அலை) அவர்களிடம் திரும்பிவந்தேன். அப்போது அவர்கள் முன்போலவே (குறைத்துக் கேட்கும்படி) கூறினார்கள். நான் திரும்பிச் சென்றேன். எனக்கு (இருபதிலிருந்து பத்து குறைக்கப்பட்டு) தினந்தோறும் பத்து (வேளைத்) தொழுகைகள் (தொழும்படி உத்திரவிடப்பட்டது. நான் (மூசா -அலை- அவர்களிடம்) திரும்பி வந்தேன். அப்போதும் அவர்கள் முன்போலவே சொன்னார்கள். நான் திரும்பிச் சென்றேன். ஒவ்வெரு நாளும் (வேளைத்) தொழுகைகள் (நிறைவேற்றும்படி) எனக்கு உத்தரவிடப்பட்டது. நான் மூசா (அலை) அவர்களிடம் திரும்பி வந்தேன். அப்போது உங்களுக்கு என்ன உத்தரவிடப்பட்டது என்று கேட்டார்கள். ஒவ்வெரு நாளைக்கும் ஐந்து (நேரத்) தொழுகைகள் எனக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று சொன்னேன். ஒவ்வெரு நாளும் (ஐந்து நேரத்) தொழுகைகள் உங்கள் சமுதாயத்தினர் தாங்கமாட்டார். உங்களுக்கு முன்பே மக்களுடன் பழகி நான் நன்கு அனுபவப்பட்டுள்ளேன். நான் பனூ இஸ்ராயீல்களுடன் பழகி நன்கு பக்குவப்பட்டுள்ளேன். எனவே/ உங்கள் இறைவனிடம் திரும்பிச் சென்று உங்கள் சமுதாயத்தினருக்காக இன்னும் குறைத்துத் தரும்படி கேளுங்கள் என்று கூறினார்கள். அதற்கு நான்/ (கடமையான தொழுகைகளின் எண்ணிக்கைக் குறைத்துத் தரும்படி பலமுறை இறைவனிடம்) எனக்கே வெட்கமேற்படும் வரையில் நான் கேட்டுவிட்டேன். ஆகவே/ நான் திருப்தி அடைகிறேன்/ (இந்த எண்ணிக்கை) ஒப்புக் கொள்கிறேன் என்று கூறினேன். பிறகு (அந்த இடத்தை) நான் கடந்த போது/ (அல்லாஹ்வின் தரப்பிலிருந்து) நான் என் (ஐந்து நேரத் தொழுகை எனும்) விதியை நடைமுறைப்படுத்திவிட்டேன். என் அடியார்களுக்கு (ஐம்பது வேளைகளிலிருந்து ஐந்து நேரமாகக் குறைத்துக் கடமையைக்) எளிதாக்கிவிட்டேன் என்று (அசரீரிக்) குரல் ஒலித்தது-

No comments:
Post a Comment