Thursday, March 17, 2011

அணுஅணுவாய் கொல்லும் அணுக்கதிர் வீச்சு


அணுஅணுவாய் கொல்லும் அணுக்கதிர் வீச்சு

மனித உடலில் பல வகையில் அணுக்கதிர் வீச்சு பரவ வாய்ப்புள்ளது. காய்ச்சல் முதல் கேன்சர் வரை வரும் ஆபத்து உண்டு. தோல் வியாதிகளும் வரும்.
 தலையில் 100 ரெம் வரை கதிர்வீச்சு ஏற்பட்டால், அதனால் தலைமுடி 2 வாரத்தில் கொட்டி விடும்.  
 வாந்தி, பேதி ஏற்படும். அதனால், வேறு கோளாறுகளும் ஏற்படும்.
 ரத்தத்தில் கலந்து விட்டால், அதில் ரசாயன மாற்றத்தை ஏற்படுத்தும். அதாவது ரத்தம் கெட்டு விடும்.
 ரத்தக்கொதிப்பு ஏற்படவும் வாய்ப்பு உண்டு.
 உடலில் மைய நரம்பு மண்டலம் மிக முக்கியமானது. அதில் கதிர்வீச்சு பாய்ந்தால், மூளையில் இருந்து சிறுநீரகம் வரை பாதிக்க வாய்ப்புண்டு. இதில் 2 ஆயிரம் ரெம் வரை வீச்சு ஏற்படுமாம்.  
 குடலையும் கதிர்வீச்சு பாதித்தால் ரத்தப்போக்கு அதிகரிக்கும். கடைசியில் மரணம் தானாம்.


இதுவரை 3 விபரீதம்

1969ல் சுவிட்சர்லாந்தில் லுசென்ஸ் அணுஉலை
1979 ல் அமெரிக்காவில் த்ரீமைல் தீவு அணுஉலை,
1986ல் உக்ரைனில் செர்னோபில் உலை ஆகியவற்றில் இப்படி விபத்து ஏற்பட்டுள்ளது. பல லட்சம் பேர் இன்னமும் கூட ஊனமாகவும், வியாதிகளால் பாதிக்கப்பட்டும் உள்ளனர்
இப்போது இந்த வரிசையில் ஜப்பான் அணுஉலைகள் சேர்ந்துள்ளன .

வீட்டுக்குள் முடக்கம்

ஜப்பான் அரசு, மக்களுக்கு முன்னெச்சரிக்கை அறிவிப்பை விடுத்துள்ளது. வீட்டுக்குள் முடங்க வேண்டும்; வெளியில் வரகூடாது; ஜன்னல், கதவுகளை காற்று புகா வண்ணம் இறுக்கமாக மூட வேண்டும். துணிகளை கூட வெளியில் காயப்போடக்கூடாது என்றெல்லாம் அதிரடி கட்டளைகளை போட்டுள்ளது. மக்கள் இப்போது சோறு, தண்ணீர் சாப்பிடக்கூட பயந்து கதிகலங்கிப்போயுள்ளனர்

No comments:

Post a Comment