Thursday, June 2, 2011

தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் தவறு தினமணி

தேடப்படும் குற்றவாளிகள்: பாகிஸ்தானிடம் புதிய பட்டியலை வழங்க இந்தியா முடிவு

First Published : 21 May 2011 04:02:02 AM IST


புதுதில்லி, மே 20: பாகிஸ்தானில் பதுங்கி இருப்பதாக இந்தியா சந்தேகிக்கும் குற்றவாளிகள் பட்டியலை திருத்தி புதிய பட்டியலை வழங்குவது என இந்தியா முடிவு செய்துள்ளது.இந்தியாவில் தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டு பாகிஸ்தானில் மறைந்திருப்பதாகக்கூறி 50 பேர் பட்டியலை சமீபத்தில் சிபிஐ வெளியிட்டது. அவர்களை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரி பாகிஸ்தான் அதிகாரிகளிடம் அந்த பட்டியலை இந்தியா அளித்தது.இந்த பட்டியலில் இடம் பெற்றிருந்தவர்களில் ஒருவர் பெரோஸ் அப்துல்கான். இவர் மும்பையில் 2003-ம் ஆண்டு நடந்த ரயில் குண்டு வெடிப்பில் தொடர்புடையவர். இவரும் பாகிஸ்தானில் பதுங்கியிருப்பதாக சிபிஐ குற்றம்சாட்டியிருந்தது. ஆனால் பெரோஸ் அப்துல்கான் அந்த வழக்கிற்காக மும்பை போலீஸôரால் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்ற அவர் இப்போது ஜாமீனில் விடுதலையாகி மும்பையில் வசித்து வருகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

இது சிபிஐக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது.தேடப்படும் மற்றொரு குற்றவாளியாக சிபிஐயால் பாகிஸ்தானிடம் அளிக்கப்பட்ட பட்டியலில் இடம் பெற்றுள்ள வாஸôஹுர் கமர்கான் மும்பையில் இருப்பது தெரியவந்துள்ளது.
இதேபோல 50 பேர் பட்டியலில் இடம் பெற்றுள்ள ஐக்கிய தேசிய விடுதலை முன்னணித் தலைவர் ராஜ்குமார் மெஹென் என்பவர் தேசிய புலனாய்வு அமைப்பின் காவலில் இருப்பது இப்போது தெரியவந்துள்ளது.இதையடுத்து சிபிஐயின் இணையதளத்தில் வெளியிடப்பட்டிருந்த இந்தப்பட்டியலை சிபிஐ வெள்ளிக்கிழமை வாபஸ் பெற்றுக் கொண்டது. பாகிஸ்தானிடம் அளிக்கப்பட்ட தேடப்படும் குற்றவாளிகள் பட்டியல் குறித்து முழுமையாக விசாரித்து சரிசெய்யும்படி சிபிஐ இயக்குநர் ஏ.பி.சிங் உத்தரவிட்டார்.எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நடைபெறாமல் இருக்க அனைத்து மாநிலங்களும், தேடப்படும் குற்றவாளிகளின் நிலவரம் குறித்து 3 மாதங்களுக்கு ஒருமுறை ஆய்வு நடத்தி மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அறிக்கை அனுப்ப வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment