Thursday, July 14, 2011

மும்பை குண்டு வெடிப்புக்கு கண்டனம்

13/7 அன்று மும்பையில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிகளில் நடை பெற்ற குண்டு வெடிப்புக்கள் இதயமுள்ள எவரையும் பதற்ச் செய்யும் கொடூரச் செயலாகும்.

கடை வீதிக்கு சென்றவர்கள், வீடு திரும்பிக் கொண்டிருந்தவர்கள் என எந்தக் குற்றமும் செய்யாத அப்பாவிகள் 20 க்கும் மேற்பட்டோர் பலியானதும், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்த்தும் சகித்துக் கொள்ள முடியாத பயங்கரவாதமாகும்.

இந்திய மக்கள், குறிப்பாக முஸ்லிம்கள் இதை ஒன்று திரண்டு கண்டிக்கிறார்கள். பாதிக்கப் பட்டவர்களுக்காக தங்களது அனுபாபத்தை ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறார்கள்.. மும்பை வாசிகளுக்கு நமது தார்மீக ஆதரவையும் ஆறுதலையும் தெரிவித்து அவர்களுடை துக்கத்தில் பங்கேற்கிறோம்.

இஸ்லாம் நீதிக்கும் கருணைக்கும் பெயர் பெற்ற மார்க்கமாகும். மார்க்கத்தின் பெயரால இக்கொடூரத்தை யாரும் நியாயப் படுத்த முடியாது. நியாயப் படுத்த வில்லை.

அதே சமயம், முறையான விசாரணையை தொடங்குவதற்கு முன்னதாக இதை இஸ்லாமியப் பெயர்களோடு இணைத்து மீடியாக்களும் பா,சிதம்பரம் அத்வானி உள்ளிட்டோரும் பேசுவது எரிகிற வீட்டில் விறகு பொறுக்கும் அற்பத்தனமாகும்.

இது போன்ற சந்தர்ப்பங்களை மீடியாக்களை எதிர் கொள்ளும் திறமை இந்திய அரசியல் வாதிகளுக்கும், காவல் துறைக்கும் இருப்பதில்லை. ண்மையான் குற்றவாளிகளை உறுதியாக பிடிப்போம். நீதியின் முன்னிறுத்துவோம் அதிகப் பட்ச தண்டனையை பெற்றுத்தறுவோம் என்று சொல்லி விட்டு காரியத்தில் இறங்குவதற்கு பதிலாக ஏதாவது முஸ்லிம் பெயர்களை சொல்லி விட்டு அலப சமாதானம் அடைய நினைக்கிறார்கள்.

இதனால் பல சமயத்திலும் புலனாய்வு அமைப்புக்கள் அதே திசையில் சில நாட்கள சுற்றி விட்டு யாராவது சில அப்பாவிகளை பிடித்து வழகுகளை முடித்து விடுகிறார்கள். உண்மை குற்ற்வாளிகள் தப்பித்து விடுகிறார்கள். இதனால் தான் குண்டிவெடுப்புக்களின் மூல வித்துக்கள் இன்னும் கண்டு பிடிக்கப் படாமல் தொடர்ந்து குண்டுகள் வெடிக்கின்றன.

இந்தியா பாகிஸ்தான் பேச்சு வார்த்தையை சிதைப்பதற்காக, அல்லது
தற்போதைய ஆளூம் அரசுக்கு அவப பெயரை ஏற்படுத்துவதற்காக அடுத்து வருகிற தேர்தலில் லாபம் அடைவதற்காக எதிர்க்கட்சிகள் இந்த சதிச் செயலை செய்திருக்கலாம்.

மும்பையில் ஏதாவது பெரிய கட்த்தல் நடத்துவத்ற்காக போலீஸ்கார்ர்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக மும்பையில் உள்ள பிரபல குற்றவாளிகள் இந்த குண்டு வெடிப்பை நிகழ்த்தியிருக்கலாம்.

இது அந்நிய நாட்டு சதியாகவும் இருக்கலாம். 

நமது நாட்டில் நடைபெற்ற குண்டு வெடிப்புகளுக்கு பக்கத்து நாடுகளின் அதிபர்கள் பலத்த கண்டனத்தை தெரிவித்திருக்கிற் போது பா, சிதம்பரம் அவர்கள் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் ஆகிய பக்கத்து நாடுகளை பயங்கரவாத்த்தின் மையப் புள்ளிகள் என்று வர்ணித்திருப்பது தேவையற்றதும் பிரச்சினையை திசை திருப்புவதுமாகும்.

மத்திய மாநில அரசுகள் விரைவாக செயல்பட்டு இந்த கொடுர்ரச் செயலில் ஈடுபட்டோரையும் இதற்கு பின்னணியில் இருந்தோரையும் கண்டு பிடித்து நீதி முன் நிறுத்த வேண்டும்.

இக்கோர நிகழ்வில் தங்களது உறவினர்களை பலி கொடுத்தவர்களுக்கு அல்லாஹ் தகுந்த மன ஆறுதலையும் தேவையான மாற்று ஏற்பாடுகளையும் தந்தருள்வானாக!

நமது நாட்டை சதிகார்ர்கள் அக்கிரமக் கார்ர்களின் பிடியிலிருந்து பாதுகாத்து நிலையான நல் அமைதியை செழிக்கச் செய்வானாக

No comments:

Post a Comment