Thursday, August 4, 2011

நோன்பின் மருத்துவக் குணங்கள்.



1. நோன்பு நோய்களை மட்டும் குணப்படுத்துவது அல்லாமல் நோய் வராமலும் தடுக்கிறது.
2. அதிக இரத்த அPத்தம் (B.P) குறைகிறது.;
3. இரத்தத்தில் கொழுப்புகளையும், கொலஸ்ட்ராலையும் குறைக்கிறது.
4. இதய அடைப்பு ஏற்படுவதை தடுக்கிறது.
5. உடலில் இரத்த ஓட்ட சுழற்சியைச் சீராக்குகிறது.
6. இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.
7. .மூட்டுவலி ஆஸ்த்துமா குறைகிறது.
8. மூச்சுக்குழல் அடைப்பு, உடல் எடை,செரிமானக் கோளாறுகள், மைக்ரோன் என்னும் தீராத தலைவலி,மலச்சிக்கல்,தோல் வியாதிகள் ஆகியவை குணமடைகின்றன.
9. உடல் நோய் எதிர்ப்பு சக்தி பெறுவதால் நோயின்றி நம்மைப் பாதுகாக்கிறது.
10. உடலில் ஏற்படும் காயங்கள், அறுவை சிகிட்சை காயங்கள், உடைந்த தசைகள் ஆகிவை துரிதமாகக் குணடடைகின்றன



கொழுப்பும்; (Colastral) சர்க்கரையும் (Sugar) குறைகிறது
நோன்பைத் தொடரும்போது முதலில் உடலில் சேர்ந்திருக்கும் கொழுப்புப் பொருட்களும் ( Colastral) நமது ஈரலில் சேர்த்து வைத்திருக்கும் சர்க்கரைப் பொருட்களும் (Sugar) குறைகின்றன.
30 நாட்கள் நோன்பிருந்தால் உடல் பலகீனமடைகிறது என்பது தவறான கருத்தாகும்.
டாக்டர் சூஎன்ற ஆங்கில மருத்துவர் கூறுகிறார்.உணவில்லாமல் இறந்த நோயளிகளைவிட உணவு வேண்டாத வேளைகளில் உணவுண்டு இறந்தவர்களே அதிகம்.என்று கூறுகிறார்.

1911-ல் சவானா என்னுமிடத்தில் 101 வயது நிறைந்த மரியன் கிராப்ட்டரீ எனபவர் 63 நாட்கள் உணவின்றி இருந்திருக்கிறார்.
1931-ல் தென் ஆப்ரிக்காவில் திருமதி எ.ஜி வாக்கர் என்ற பெண்மணி உடல் எடை குறைய வேண்டும் எனபதற்காக 101 நாட்கள் உண்ணாவிரதம் இருந்திருக்கிறார். இயற்கையாவே ஒருவர் 70 நாட்களுக்கு மேலும் உணவின்றி இருக்க முடியும் என்று உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.
பேராசிரியர் மார்க்குலிஸ்எனபவர் நோன்பால் உடல் சக்தி ஆதிகமாவதாகக் கூறுகிறர். நோன்பால் உயிர் அணுக்கள் அழிவதில்லை என்கிறார்.
இளமையோடு வாழலாம்
பேராசிரியர் சைல்டு  நோன்பு இளமையோடு இருப்பதற்கு உதவியாக இருப்பதாகக் கூறுகிறார்.
 ஒரு ஆராய்ச்சியாளர் மண்புழுக்களை வைத்து ஆராய்ச்சி செய்தார். மண்புழுக்களுக்கு அவை விரும்பும் வழக்கமான உணவுகளை கொடுத்து வந்தார். அவற்றில் சில மண்புழுக்களைப் பிரித்து ஒருவேளை உணவு கொடுத்தும் , மறுவேளை உணவில்லாமலும் செய்துவந்தார். வேiளாவேளக்கு உணவுண்டு வந்த மண்புழுக்கள் விரைவில் அழிந்துவிட்டன. உணவு உண்டும் பட்டினி கிடந்தும் வந்த மண்புழுக்கள் 19 தலைமுறை வரை உயிர்வாழ்ந்ததாகக் கூறுகிறார். நோன்பின் மூலம் மனிதனின் ஆயுட்காலம் அதிகமாவதை இதன் மூலம் நிரூபித்திருக்கிறார்கள்.


நச்சுப்பொருட்கள் வெளியேறுகின்றன.
நோன்பின் மூலம் நமது உடலில் பல மாற்றங்கள் நிகழ்கின்றன. நாக்கின் மீது தடிப்பான படலம் வழவழ என்ற பிசுபிசுப்புட னிருக்கும்.இது நமது உடலிலுள்ள நச்சுப்பொருட்கள் உடலிலிருந்து வெளியேறுவதைக் காட்டுகிறது. பின்னர் பசி போய் வெண்மை நிறம் மாறி நாக்கிற்கு சிகப்பு நிறம் வந்துவிடுகிறது.
நோன்பின் போது வெளிவிடும் மூச்சுக்காற்றின் வாசனையில் தீ எரிந்தது போன்ற நாற்றம் வெளிப்படும். இது நுரையீரலில் உள்ள உயிரணுக்களில் சேர்ந்திருக்கும் விஷக்காற்றை வெளியேற்று வதனால் ஏற்படுகிறது.
உடலில் இரசாயன மாற்றம் ஏற்படுகிறது.
நோன்பின் போது உடல் வெப்பம் குறைகிறது. பின்னர்வெப்பம் உயர்ந்து சராசரி நிலையை அடைகிறது. இது உடல் இரசாயன சமநிலையை அடைந்துவிட்டது என்பதை உணர்த்துகிறது. நோன்பின் துவக்கத்தில் நாடித்துடிப்பு அதிகமாகும். பின்னர் கழிவுப்போருட்களை வெளியேற்ற உடலுக்கு அதிக வேலை இல்லாததால் உடல் இயலபான நிலைக்கு மீண்டும் வந்துவிடுகிறது.

நோன்பு சிறந்த மாமருந்து
நோன்பின் துவக்கத்தில் நாளொன்றுக்கு ஒரு பவுண்டுவரை உடல் எடை வேகமாகக் குறையும். ஆனால் சில நாட்கள் நோனபைத் தொடரும் போது உடல எடை குறையும் அளவுகட்டுப்படுத் தப்பட்டு வேண்டாத அதிகப்படியான சதை மட்டும் குறையும்..

நுரையீரலைச் சுற்றி இருக்கும் புளுரா சுவர்களில் சேர்ந்திருக்கும் விஷப் பொருட்கள் வெளியேறுகிறது.மூச்சு இளைப்பு, நோய் உள்ளவர்கள் இந்த நோயிலிருந்து நோன்புக்குப் பிறகு விடுதலை பெறுகிறார்கள்.

நோன்பு குரல்வளையை  சீர்படுகிறது.கல்லீரல்,இரத்தத்தில் உள்ள பித்த நீரின் அளவை சமநிலையில் வைக்கிறது.
சுத்தமான இரத்தம் இதய அறைகளில் பாய்கிறது. இரத்தத்தின் நிறம் சிவப்பாக மாறுகிறது.


1 comment:

  1. Alhamthulillah......

    Zasakallahirunm........

    -Jackson Abdullah

    ReplyDelete