வழக்கில் இதுவரை நடந்தவை:
2001: ஓரினச் சேர்க்கை சட்டப் பூர்வமானதாக அறிவிக்க வேண்டும் என்று ஓரினச் சேர்க்கைக்கு ஆதரவாக போராடும் 'நாஸ்' தன்னார்வ அமைப்பு டெல்லி ஐகோர்ட்டில் பொது நல வழக்கு தொடர்ந்தது.
செப்டம்பர் 2004: டெல்லி ஐகோர்ட் 'நாஸ்' தன்னார்வ அமைப்பின் பொதுநல மனுவை தள்ளுபடி செய்தது. அதனைத் தொடர்ந்து மனுவை சீராய்வு செய்யக் கோரப்படுகிறது.
நவம்பர் 3, 2004: மறு சீராய்வு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுகிறது.
டிசம்பர் 2004 : டெல்லி ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து ஓரினச் சேர்க்கைக்கு ஆதரவான 'நாஸ்' தன்னார்வ அமைப்பு சுப்ரீம் கோர்ட்டை அனுகுகிறது.
ஏப்ரல் 3, 2006: ஓரினச் சேர்க்கையாளார்களின் கோரிக்கை மனுவை ஏற்குமாறு டெல்லி ஐகோர்ட்டிற்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிடுகிறது.
அக்டோபர் 4: ஓரினச் சேர்க்கைக்கு எதிராக பாரதீய ஜனதா மூத்த தலைவர் சிங்கால் தொடர்ந்த மனுவை டெல்லி ஐகோர்ட் ஏற்கிறது.
செப்டம்பர் 18, 2008: ஓரினச் சேர்க்கையை சட்டப்பூர்வமாக்குவது குறித்து தங்களது நிலைப்பாட்டை தெரிவிக்க மத்திய அரசு கூடுதல் அவகாசம் கேட்கிறது.
செப்டம்பர் 25: மத்திய அரசு தங்கள் அடிப்படை உரிமைகளை அத்துமீற முடியாது என ஓரினச் சேர்க்கை செயற்பாட்டாளர்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
செப்டம்பர் 26: இந்த
பிரச்சனையில் மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் சுகாதாரத் துறை
அமைச்சகமும் இரு வேறு நிலைப்பாடுகளை தெரிவித்ததை அடுத்து டெல்லி ஐகோர்ட்
மத்திய அரசிடம் விளக்கம் கேட்கிறது.
செப்டம்பர் 26: தனது
கருத்தை தெரிவித்த மத்திய அரசு இதனை சட்டப்பூர்வ ஆக்குவதால் சமூக அந்தஸ்து
குறையும் மேலும் ஓரினச் சேர்க்கை என்பது தவறான புத்தியின் பிரதிபலிப்பு
என்று என்று கூறியது.
அக்.15, 2008: அரசின் மத ரீதியான வாதங்களை ஏற்க மறுக்கும் ஐகோர்ட் மருத்துவ ஆதாரங்களை முன்வைக்குமாறு கேட்கிறது.
ஜூலை 2, 2009: ஒரே பாலினத்தை சேர்ந்தவர்கள் விருப்பத்துடன் தனிமையில் உறவு கொள்வது குற்றமாகாது என ஐகோர்ட் தீர்ப்பளிக்கிறது.
ஜூலை 9, 2009: ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ஒருவர் வழக்கு தொடுக்கிறார்.
மார்ச் 27, 2012: வழக்கு விசாரணை முடிந்த நிலையில், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை ஒத்திவைக்கிறது.
டிசம்பர் 11, 2013: இவ்வழக்கில்
இன்று தீர்ப்பு வழங்கிய சுப்ரீம் கோர்ட் ஓரினச் சேர்க்கை என்பது
அதிகபட்சம் ஆயுள் தண்டனை வழங்கக் கூடிய குற்றம் என்று தீர்ப்பு அளிக்கிறது.
No comments:
Post a Comment