Thursday, March 13, 2014

மர்மமான விமான விபத்துக்கள்



விமானங்கள் நடுவழியில் மாயமாவதும், அதைச் சுற்றியுள்ள புதிர்கள் விடுபடாமலிருப்பதும் உலகம் முழுவதும் பல்லாண்டுகளாக நடைபெற்றவாறு உள்ளன.
தன்னந்தனியாக விமானம் ஓட்டிய பெருமைக்குரிய முதல் பெண்மணி அமெலியா இயர் ஹார்ட்’. இவர் 1937-ல் அட்லாண்டிக்  பெருங்கடலை முதன் முறையாக லாக்கீட் நிறுவனத்தின் மாடல் 10 விமானத்தில், பறக்க முயன்றார். அப்போது, ஹாவ்லாந்து தீவுக்கு அருகில் தன் துணை விமானி நூனுடன் திடீரென காணாமல் போனார்.
அமெலியா ஓர் அமெரிக்க உளவாளி. அவரை ஜப்பானியர்கள் பிடித்துக் கொன்றுவிட்டார்கள். அவர் வேண்டுமென்றே நூனுடன் வேறு நாட்டுக்கு சென்று தலைமறைவாக வாழ்கிறார் என்பது உள்பட பல்வேறு கட்டுக் கதைகள் நிலவுகின்றன. கடைசிவரை அவர்களின் கதி என்னவானது என்று இதுவரையும் தெரியவில்லை.
1945-ல், 14 வீரர்களுடன் அமெரிக்காவின் ஃபுளோரிடாவிலிருந்து புறப்பட்டஃபிளைட் 19′  எனப்படும் ஐந்து போர் விமானங்கள் பெர்முடாமுக்கோணம் என்றழைக்கப்படும் வடக்கு அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் பறந்து கொண்டிருந்த போது காணாமல் போயின. விமானங்களை தேடிச் சென்ற மீட்பு விமானமும் நடுவானில் வெடித்துச் சிதறியாதாக நம்பப்படுகிறது. அந்த விமானங்களின் சிதறல்களோ, வீரர்களின் உடல்களோ இதுவரையிலும் கண்டுபிடிக்க முடியவில்லை.
1947-ல், பிரிட்டன் தென் அமெரிக்க விமான நிறுவனத்தின் (பிஎஸ்ஏஏ) ஸ்டார் டஸ்ட் ரக விமானம், 11 பேருடன் ஆண்டிஸ்மலைப்பகுதிகளில் வீசிய பனிப்புயலில் சிக்கி விபத்துக்குள்ளானது. 50 ஆண்டுகள் கழித்துதான் இந்த முடிவும் உறுதி செய்யப்பட்டது. அதுவரை வேற்று கிரகவாசிகள் கடத்தியதாக கட்டுக்கதைகள் உலவின.
1962-ல், அமெரிக்கத் துருப்புகள் உள்பட 107 பேருடன் வியத்நாம் நோக்கி புறப்பட்டலாக்கீட் சூப்பர் கான்ஸ்டெல்லெஷன்விமானம் எங்கே போனது? அதிலிருந்துவர்களின் கதி என்வானது? என்பது இன்றுவரையிலும் தெரியவில்லை.
விமானம் நடுவானில் வெடித்துச் சிதறியிருக்கலாம் என்று சொல்லப்பட்டாலும், சதிவேலைகள் சம்பந்தமான கதைகளும் உலா வந்துக் கொண்டிருக்கின்றன.
2009-ல், ‘ஏர்பஸ், 330-203 விமான விபத்துக்கும், தற்போது மாயமான மலேசிய விமான விபத்துக்கும் பல ஒற்றுமைகள் உண்டு.
ஏர் ஃபிரான்ஸீக்கு சொந்தமான இந்த விமானம், 228 பேருடன் அட்லாண்டிக் பெருங்கடல்  பகுதியில் திடீரென மாயமானது. விமானத்தின் சில சிதறல்கள் மறு நாளே கிடைத்தாலும், அதன் கருப்புப் பெட்டியைக் கண்டுபிடிப்பதற்கு சுமார் 2 ஆண்டுகள் பிடித்தது. அப்போதுதான் இந்த விபத்து சம்பந்தமாக நிலவி வந்த கற்பனைகள் விலகி இயந்திர கோளறுதான்விபத்துக்குக் காரணம் என்ற உண்மை வெளிப்பட்டது.

No comments:

Post a Comment